தாய் கண் முன்னே.. சென்னையில் கடத்தப்பட்ட சிறுவன் 14 நாட்களுக்கு பிறகு மீட்பு.. சிக்கிய 3 பெண்கள்!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நசரத்பேட்டை ரயில் நிலையம் அருகே 14 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளான்.
சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து, காணாமல் போன சிறுவனை தேடி வந்த நிலையில், இன்று சிறுவன் ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே மீட்கப்பட்டுள்ளான். சிறுவனை கடத்திச் சென்ற பிச்சை எடுக்க வைக்கும் கும்பலைச் சேர்ந்த ஐந்து பெண்களில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் சகிதா பேகம். இவரது கணவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு ஆறு வயது மற்றும் மூன்று வயதில் இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சகிதா பேகம் தனது இரு மகன்களுடன் சென்னையில் உள்ள காய்கறி கடை ஒன்றில் வேலை பார்ப்பதற்காக கடந்த ஜனவரி 12ஆம் தேதி ரயிலில் எழும்பூருக்கு வந்துள்ளார்.
சென்னை வந்த பிறகு, காய்கறி கடை ஊழியர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதாக தெரிவித்ததால் இரண்டு மகன்களுடன் சகிதா பேகம் அங்கு சென்றுள்ளார். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவரது 6 வயது மகன் திடீரென காணாமல் போயுள்ளார். இதையடுத்து அவர் அங்கு நீண்ட நேரமாக தன் மகனை தேடியுள்ளார்.
எங்கு தேடியபோதும் மகன் கிடைக்காத நிலையில், உடனடியாக சகிதா பேகம் சென்ட்ரல் பாதுகாப்பு படை மற்றும் சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் தன் மகனை காணவில்லை என புகார் செய்துள்ளார். இதையடுத்து உடனடியாக போலீசார் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது சிறுவன் முதலில் இரண்டு இளைஞர்களுடன் இருந்த நிலையில், அவர்கள் ரயிலுக்கு நேரமானதால் கிளம்பிய நிலையில், அடுத்ததாக சிறுவன் ஒரு பெண்ணுடன் சென்றது தெரியவந்தது.
அந்தச் சிறுவனை அழைத்துச் சென்ற பெண் யார், அவர் எங்கு சென்றார் என போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சிறுவன் கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. சென்னை முழுவதும் ரயில் நிலையங்களில் அலர்ட் செய்யப்பட்டு, சிறுவனை கண்டுபிடிக்க முயற்சி செய்யப்பட்டது. சிறுவனை கண்டுபிடிக்க சென்ட்ரல் ரயில்வே போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட போன அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நசரத்பேட்டை ரயில் நிலையம் அருகே 14 நாட்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளான். சிறுவனை கடத்திச் சென்றவர்கள், பிச்சை எடுக்க வைக்கும் கும்பலைச் சேர்ந்த பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
சிறுவனை கடத்திச் சென்ற ஐந்து பெண்களில் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வட மாநிலத்துக்குச் செல்லும் ரயில் மூலமாக சிறுவனை அந்தப் பெண்கள் ஆந்திராவுக்கு கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுவன் 14 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications