சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வருடா வருடம் குறிப்பிட்ட நாளில் தவறாமல் சந்திக்கும் ரஜினி, பொன்ராஜ்.. ரகசியம் என்னவோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    வருடா வருடம் குறிப்பிட்ட நாளில் தவறாமல் சந்திக்கும் ரகசியம் என்னவோ!- வீடியோ

    சென்னை: சிதம்பரம் ரகசியம் தெரிஞ்சாலும் தெரிஞ்சிடும்.. இந்த போயஸ்கார்டன் ரகசியம் மட்டும் தெரியவே இல்லை. வருஷம் தவறாமல் ஒரு சந்திப்பு நடக்கிறது என்றால் அது ரஜினிகாந்த் - பொன்ராஜ் சந்திப்புதான்!

    மறைந்த அப்துல்கலாமின் ஆலோசர் பொன்ராஜ்-க்கு ரஜினிகாந்த் மேல் ஒரு தனி மரியாதை உண்டு, அக்கறை உண்டு! மிகச் சிறந்த மனிதர், மனிதாபிமானி, எளிமையானவர், ஒரு தொலைநோக்குப் பார்வை மிக்கவர் என்றெல்லாம் ரஜினியை பற்றி பொன்ராஜ் கூறியிருக்கிறார்.

    இவருக்கு மட்டுமில்லை, திருநாவுக்கரசு, திருமாவளவன், குருமூர்த்தி, என ரஜினிக்கு நெருக்கமானவர்களும், நண்பர்களும் அரசியல் வட்டாரத்தில் அதிகம். இவர்கள் அடிக்கடி சந்தித்து விவாதிப்பதும் இயல்பான ஒன்றுதான்!

    தொடர்ந்து சந்திப்பு

    தொடர்ந்து சந்திப்பு

    ஆனால் இவர்களுக்கும், பொன்ராஜ்-க்கும் ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது. மற்றவர்கள் எல்லாம் சூழல், அல்லது நட்பு ரீதியாக ரஜினியை சந்தித்து பேசுவார்கள். ஆனால் பொன்ராஜ் மட்டும் ரஜினியை தொடர்ந்து குறிப்பிட்ட நாளில் சந்தித்து பேசி வருகிறார்.

    மோடிலை.. அட மோடியை கலாய்க்க ராகுல் உருவாக்கிய புதிய வார்த்தை.. அர்த்தம் தெரிஞ்சா அசந்துடுவீங்க! மோடிலை.. அட மோடியை கலாய்க்க ராகுல் உருவாக்கிய புதிய வார்த்தை.. அர்த்தம் தெரிஞ்சா அசந்துடுவீங்க!

    நதிநீர் இணைப்பு

    நதிநீர் இணைப்பு

    வருஷந்தோறும், குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட தேதியில் (ஒன்றிரண்டு நாள் முன்னே பின்னே ஆகும்) இந்த சந்திப்பு நடந்து வருகிறது. 2018ம் ஆண்டு மே 17ம் தேதி இருவரும் சந்தித்துப் பேசினர். இப்போது மே 16ம் தேதி இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். எப்போது இவர்கள் இருவரும் சந்தித்து பேசினாலும், நாட்டின் நலன் பற்றி பேசியதாகவும், நதிநீர் இணைப்பு சம்பந்தமாக பேசியதாகவும் சொல்வார்கள்.

    உறுதியாக தெரியவில்லை

    உறுதியாக தெரியவில்லை

    அதே மாதிரிதான் இன்றைக்கும் இவர்களிடையே சந்திப்பு நடந்துள்ளது. ஆனால் என்ன பேசினார்கள், எதற்கான சந்திப்பு இது என்பது உறுதியாக தெரியவில்லை. தமிழக அரசியல் குறித்து இருவரும் விவாதித்ததாகவும் சொல்லப்படுகிறது.

    புது கட்சியா?

    புது கட்சியா?

    தமிழக அரசியல் பற்றி என்றால், ரஜினி இனி வரப்போவதாக சொல்லும் அரசியலாக இருக்குமா? அல்லது பொன்ராஜ் ஏற்கனவே ஆரம்பித்த கட்சி பற்றியதாக இருக்குமா? எதைபற்றி பேசியிருப்பார்கள்? என்னவா இருக்கும்?

    விவாதங்கள்

    விவாதங்கள்

    ரஜினி புதிய கட்சி குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் வருகிற வழியைத்தான் காணோம். ஒரு வேளை தான் தொடங்கப் போகும் புதிய கட்சிக்கான திட்டங்கள் குறித்து பொன்ராஜிடம் அவர் விவாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Abdul Kalam PA Ponraj met Actor Rajinikanth in Poes Garden house today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X