ஏசி பராமரிப்பு.. மின்சாரம், செலவு மிச்சமாகும் என நினைத்து தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்ய வேண்டாம்
சென்னை: சென்னையில் உள்ளவர்கள் டிசம்பர் ஜனவரி, பிப்ரவரி இந்த 3 மாதத்தை தவிர மற்ற மாதங்களில் ஏசி அல்லது ஃபேனை ஆன் பண்ணாமல் வாழவே முடியாத நிலை இருக்கிறது. தற்போது கோடைக்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் ஏசி பயன்படுத்த தொடங்கிவிட்டார்கள் மக்கள். ஏசி பராமரிப்பு பற்றி இப்போது பார்ப்போம்.
பொதுவாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கோடைக்காலங்களில் வெயில் அதிகமாக இருக்கும். இதில் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள், ஏசி இல்லாமல் வாழவே முடியாது என்கிற அளவிற்கு கான்கிரீட் காட்டில் வாழ்கிறார்கள். அரை மணி நேரம் மின்சாரம் இல்லாவிட்டாலே மொத்தமாக பரிதவித்து போவார்கள். தவிர மற்ற ஊர்களில் உள்ளவர்கள் கோடைக்காலங்களில் மட்டும் தான் பேன் அல்லது ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை இருக்கும்.

விஷயத்திற்கு வந்துவிடலாம்.. கோடைக்காலம் வந்துவிட்டது என்று இத்தனை நாட்களாக ஆன் பண்ணாமல் வைத்திருக்கும் ஏசியை உடனே ஆன் பண்ண வேண்டாம்.. உங்கள் ஊரில் உள்ள ஏசி மெக்கானிக்கை வரவழைத்து எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இப்படி செய்தால் மட்டுமே விபத்து ஏற்படாமல் தப்பிக்க முடியும். அதேபோல் தேவையற்ற செலவு வருவதையும் தடுக்க முடியும்.
ஏனெனில் ஏசி மெஷினை நீண்ட நாள் ஆன் செய்யாமல் வைத்திருந்தால்.. உங்கள் ஏரியாவில் உள்ள குருவி, புறா, காகம் , அணில் உள்ளிட்டவை கூடு கட்டி கூடியேறும் வாய்ப்பு உள்ளது அதனை கவனிக்காமல் ஏசியை இயக்கிவிட்டால் உங்கள் வீட்டில் ஏசியின் மோட்டார் எரிந்து வீணாகும் வாய்ப்பு உள்ளது.
இதேபோல் ஏசியின் வயர்களை எலி கடித்து வைத்திருந்தாலும் பின்னாளில் சிக்கலாகும். இது உங்கள் ஏசி கேபிள்களை தீப்பிடிக்க வைத்துவிடும். எப்படி வாகனம் வாங்கி நீண்ட நாள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் துருப்பிடித்து வீணாகுமோ அதுபோல் வீணாகிவிடும். எனவே ஏசியை அவ்வப்போது சர்வீஸ் செய்து பெரிய பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து சரி செய்யுங்கள். அதிக வாட்ஸ் மின்சாரத்தை தாங்கக்கூடிய தரமான பிளக், சுவிட்ச், கேபிள் ஆகியவற்றையே நீங்கள் உங்கள் ஏசிக்கு பயன்படுத்த வேண்டும்.
குறைந்தது, ஒரு ஏசி சுமார் ஆறு மாதங்கள் செயலற்ற நிலையில் இருந்தால், refrigerant ஆவியாகிவிடும். அப்படியான சமயங்களில், நீராவி வெளியேற்றப்பட வேண்டும், ஏசி சாதாரணமாக வேலை செய்ய சிலிண்டரில் புதிய refrigerant நிரப்ப வேண்டியது அவசியம் ஆகும். ஏசியை ஆன் செய்வதற்கு முன், பிளக்கிங் பாயின்ட் சரியான எர்த்திங் உள்ளதா என்பதை மெக்கானிக் வைத்து சோதித்து பாருங்கள்.. இல்லாவிட்டால் தேவையற்ற செலவும் பாதிப்பும் வரும். விலை குறைந்த மலிவான தரமற்ற ஸ்டெப்லைசர் பயன்படுத்த வேண்டாம்.
சரி ஏசியில் எந்த பிரச்சனையும் இல்லை.. மின் கட்டணம் குறைவாக வர வேண்டும் என்று ஆசைப்பட்டு நீங்கள் ஏசிகளை இரவில் ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் குறைந்த வெப்பநிலையில் (16, 17 டிகிரியில்) வைத்திருந்த பிறகு அணைக்கிறீங்களா.. இன அப்படி செய்யாதீங்க.- அப்டி மாறாக, வெப்பநிலையை 24°C இல் வைத்து, இரவு முழுவதும் இயங்கினால், கம்ப்ரசர் அணைக்கப்பட்டு, வெப்பநிலையைப் பராமரிக்க ஆன் செய்யப்படும். இதனால் மின் கட்டணமும் பெரிய அளவில் வராது. கம்ப்ரசர் நல்ல நிலையில் இருக்கும்.. ஏசியும் நீண்ட நாள் நன்றாக இருக்கும்.
ஏசி இயந்திரத்தை வீடுகளுக்கு எப்படி பயன்படுத்த வேண்டும்: 100 சதுர அடிக்கு 1 டன் ஏசி பயன்படுத்தலாம், அதற்கு மேல் ஒன்றரை டன், பெரிய அறைக்கு 2 டன் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட ஏ.சி பயன்படுத்தலாம்..












Click it and Unblock the Notifications