திமுகவுக்கு ஷாக் தந்த ஏசிஎஸ்.. சமுதாய வாக்குகளை மொத்தமாக அள்ளிய மாஸ்டர் பிளான்!
வேலூர் தொகுதியில் சமுதாய வாக்குகளை ஏசி சண்முகம் அள்ளிவிட்டார்
Recommended Video
சென்னை: பக்காவாக பிளான் போட்டு காய் நகர்த்தி பிரச்சாரம் செய்த ஏசி சண்முகத்தை அவர் சமுதாய மக்கள் காப்பாற்றி விட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
போன முறை அதாவது 2014-ல் ஏசி சண்முகம், பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் 2-வது இடத்தைதான் பிடித்தார். இதற்கு காரணம் பாஜகவில் சார்பாக நின்றதால் இஸ்லாமிய ஓட்டுக்கள் இவருக்கு விழவில்லை.
போன முறையே அப்படி என்றால், இந்த முறை அவ்வளவுதான் என்று நினைத்த ஏசி சண்முகம், இரட்டை இலை சின்னத்தில் நிற்க தயாரானார். எப்படியும் இந்த முறையும் அதிருப்தி ஓட்டுக்கள் விழுந்துவிடக்கூடும் என்பதால், இஸ்லாமிய வாக்குகளை தவிர்த்து மற்ற ஓட்டுக்களை எப்படி வாங்குவது என்று கணக்கு போட்டார்.

தீவிர வேலை
வன்னியர்கள் ஒருபக்கம், முதலியார்கள் ஒருபக்கம் இருந்தாலும் இஸ்லாமிய ஓட்டுக்களே வெற்றி தோல்வியை வேலூரில் தீர்மானிப்பதாக இருக்கும். இந்த யதார்த்தம் அறிந்தும், தன்னை மட்டுமே முழுதாக நம்பி களம் இறங்கினார் ஏசிஎஸ்.

தலித் ஓட்டுக்கள்
தன்னுடைய முதலியார் வாக்கு உட்பட, நாயுடு, தலித், பிற சமூக வாக்குகள் கிடைக்கும் என்றும் கணக்கு போட்டு வேலை பார்த்தார். அதன்படியே முதலியார், நாயுடு உள்பட பிற சமுதாய வாக்குகள் ஏசிஎஸ்-க்கு கிடைத்துள்ளன. அதேபோல, தலித் வாக்குகளையும் இவர் ஓரளவு பெற்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

வன்னியர்கள்
அது மட்டும் இல்லை, துரைமுருகனுக்கு வன்னியர் வாக்குகள் பெருமளவு போகக்கூடும் என்று கணிக்கப்பட்டாலும், அதில் ஓரளவு ஏசிஎஸ்-க்கும் கிடைத்திருக்கவே செய்கிறது. இதற்கு உதாரணம்தான் அனைக்கட்டு சட்டமன்ற தொகுதி. இங்கு பெருமளவு வன்னியர்கள் இருந்தாலும், ஏசிஎஸ் 20 ஆயிரம் வாக்குகளை பெற்று அனைக்கட்டுவை அள்ளிவிட்டார்.

திமுக கணக்கு
வன்னியர் நிறைந்த அனைக்கட்டு தொகுதியிலேயே இப்படி என்றால், முதலியார் நிறைந்த தனி தொகுதியான குடியாத்தத்தில் சமுதாய வாக்குகள் லட்டு போல வந்து விழுந்தன. இதுவும் திமுகவை விட அதிகம்தான். ஆக மொத்தம், திமுகவின் கணக்கு ஒரு தினுசாக இருந்தால், ஏசிஎஸ்-ன் கணக்கு வேறு தினுசாக இருந்திருக்கிறது.. இதுதான் திமுகவுக்கு ஷாக்கையும் தந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications