மறக்க முடியாத மறக்குமா நெஞ்சம்! ஏ.ஆர். ரகுமான் கச்சேரியில் குழப்பம்! மன்னிப்பு கேட்ட ஏற்பாட்டாளர்கள்
சென்னை: ஏ.ஆர். ரகுமானின் இசை நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மக்களுக்கும் ஏ.ஆர்.ரகுமான் சாருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ரசிகர்களின் பலத்த வரவேற்பால் இந்த நிகழ்ச்சி பெரும் வெற்றியாகியுள்ளது.

அதிகபடியான கூட்ட நெரிசலால் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போன ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம். ரசிகர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் நடந்த கசப்பான அனுபவத்திற்கும் இடையூறுக்கும் நாங்கள் முழு பொறுப்பேற்கிறோம் என தெரிவித்துள்ளார்கள்.
இசை புயல் ஏ.ஆர். ரகுமான், ஆஸ்கர் நாயகன்... இவர் பல்வேறு நாடுகளுக்கு சென்று இசை்கச்சேரி நடத்தியுள்ளார். இதையடுத்து சென்னையிலும் இசைக் கச்சேரி நடந்துமாறு ஏ.ஆர்.ரகுமானிடம் ரசிகர்கள் சமூகவலைதளங்களின் வாயிலாக கோரிக்கை விடுத்தனர். இதற்கு ரகுமானோ, சென்னையில் இசைக் கச்சேரிக்கு அனுமதி கிடைப்பது ரொம்ப கஷ்டம் என கூறியிருந்தார்.
இருந்தாலும் தொடர்நது ரசிகர்களின் கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசிடம் ஏ.ஆர். ரகுமான் தரப்பினர் அனுமதி பெற்றனர். இதையடுத்து பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி இசைக் கச்சேரி நடத்துவதாக ஏ.ஆர். ரகுமான் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அன்றைய தினம் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் இசை நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு நாளில் நடத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
#ARRahman
— Kamya Menon (@water_menon) September 10, 2023
AR Rahman's concert tonight was the most traumatic event I've ever been to.THOUSANDS of people WITH tickets were being sent out, not allowed to enter because thousands of TICKETS WERE OVERSOLD. There was nobody to direct anyone,the ticket booth was abandoned. pic.twitter.com/dgZ9mmiCbt
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி நேற்றைய தினம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மறக்குமா நெஞ்சம் என பெயரிடப்பட்டது. இந்தமுறை மழை வந்தாலும் மழை வராவிட்டாலும் நிகழ்ச்சி நடைபெறும் என ரகுமான் கூறியிருந்த நிலையில் நேற்றைய தினம் திட்டமிட்டபடி இசை கச்சேரியை நடத்தினார்.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் கிரவுண்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதை காண 3 ஆயிரம் முதல் ரூ 25 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பலர் ஆவலோடு வந்தனர். ஆனால் நிகழ்ச்சியை காண நிறைய பேர் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பல ரசிகர்கள் டிக்கெட் இருந்து நிகழ்ச்சியை காணவில்லை.
மூச்சு விட கூட முடியாத நிலையில் பலர் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் திரும்பி சென்றனர். அதாவது 20 ஆயிரம் இருக்கை போட்டுவிட்டு 40 ஆயிரம் டிக்கெட்டுகளை ஏற்பாட்டாளர்கள் விற்பனை செய்ததாக தெரிகிறது. மேலும் அந்த நிகழ்ச்சிக்கு திட்டமிட்டதை விட அதிகம் பேர் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Grateful to Chennai and the legendary @arrahman Sir! The incredible response, the overwhelming crowd made our show a massive success. Those who couldn't attend on overcrowding, Our sincere apologies. We take full responsibility and accountable. We are with you. #MarakkumaNenjam
— ACTC Events (@actcevents) September 11, 2023
குழந்தைகளை பலர் அழைத்து வந்ததால் பெரும் சிரமம் அடைந்தனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கார் நிறுத்தும் இடம் சரியில்லை, மேலும் ஸ்பீக்கர்களும் சரியாக இல்லாததால் ரகுமான் பாடுவதே கேட்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் டிக்கெட் இருந்தும் ரசிகர்கள் பலர் திரும்பி வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். மேலும் டிக்கெட் வாங்காதவர்களும் கச்சேரிக்குள் நுழைந்ததாகவும் போதிய காவலர்கள் அங்கு இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications