கே.டி.ராகவனை கைது செய்ய வேண்டும்.. டிஜிபி சைலேந்திர பாபுவிடம் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி புகார்!
சென்னை: பாலியல் தொடர்பான வீடியோவில் இடம்பெற்ற கே.டி.ராகவன் மீது நடவடிக்கை: டிஜிபியிடம் ஜோதிமணி புகார் அளித்துள்ளார்.
பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதனால் கே.டி. ராகவனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. இந்த விவகாரத்தை யு டியூபரான மதன் என்பவர் அம்பலப்படுத்தினார்.

கே.டி. ராகவன் ராஜினாமா
இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார். ''தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும்...எனனை சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும்...நான்30 வருடமாக எந்த ஓரு பிரதி பலனும் இன்றி பணியாற்றி வருகிறேன்..இன்று காலை சமூக வலைத்தளங்களில் என்னை பற்றி ஒரு வீடியோ வெளி வந்ததை அறிந்தேன்.

சட்டப்படி சந்திப்பேன்
என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும் என்று கே.டி. ராகவன் விளக்கம் அளித்திருந்தார்.

அண்ணாமலை விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ''பாரம்பரியத்தையும், மரபையும் கட்டிக்காக்கும் பாரதிய ஜனதா கட்சியில் பொறுப்பிலும், நிர்வாகத்திலும் இருக்கும் பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள். மிகுந்த மரியாதையுடன் நடத்தப்படுகிறார்கள். ஒரு விசாரணைக் குழு அமைத்து சாட்டப்பட்டிருக்கும் குற்றங்களில் வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பாஜக தலைவர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்
இந்த நிலையில் கே.டி. ராகவன் மீது கரூர் எம்.பி ஜோதிமணி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில்' ''இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால் கடந்த அதிமுக அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இதேபோல் அதிமுக தலைவர்களால் பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர்.

நம்பிக்கை
நீதியின் முன் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் தலைநிமிர்ந்து நடக்க முடியும். இவர்களை இந்த அரசு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் என்ற உத்தரவாதத்தை, நம்பிக்கையை தமிழக அரசு அளிக்கும் என்று நம்புகிறோம்' என்று கூறியுள்ளார்.

கடவுள் பக்தர் என கூறும் கே.டி.ராகவன்
இப்போது தன்னை சிறந்த நபராக சமூகத்தின் முன் காட்டி வந்த பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் பூசை அறை அருகில் நின்று கொண்டு ஒரு பெண்ணிடம் தகாத வகையில் ஆபாசமாக பாலியல் வக்கிரத்துடன் நடந்து கொண்டுள்ளார். ஆனால் பாஜக தொடர்ந்து பெண்களுக்கு எதிரான கடும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தங்கள் தலைவர்களை தொடர்ந்து காப்பற்றி வருகிறது.

கைது செய்ய வேண்டும்
இதுபோல பாஜகவை சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் சமூகத்திற்கும், பெண்களுக்கும் கடும் அச்சறுத்தலாக வெளியில் உலவிக் கொண்டுள்ளனர். தமிழக்தில் இந்த அவலம் இனி ஒருபோதும் நடக்க நாம் அனுமதிக்க கூடாது. எனவே கே.டி. ராகவன் உள்ளிட்ட பாஜக, அதிமுகவை சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.

நம்பிக்கை
நீதியின் முன் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புடனும், கண்ணியத்துடனும் தலைநிமிர்ந்து நடக்க முடியும். இவர்களை இந்த அரசு உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கும் என்ற உத்தரவாதத்தை, நம்பிகையை தமிழக அரசு அளிக்கும் என்று நம்புகிறோம்' என்று கூறியுள்ளார்.
-
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications