கேஸ் சிலிண்டர்களை பதுக்கினால் சட்டப்படி நடவடிக்கை.. அமைச்சர் விடுத்த எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சிலிண்டர்களை பதுக்கினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்தார்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கிடைக்கும் கச்சா எண்ணெய் தடைபட்டுள்ளதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல் உரிமையாளர்கள் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.

Action Against Gas Cylinder Hoarders Warns Minister Chakkarapani

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஹோட்டல்கள் மூடப்பட்டு வரும் நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஹோட்டல் சங்க நிர்வாகிகள், எச்.பி, இண்டேன், பாரத் உள்ளிட்ட எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த பிரநிதிகள் கலந்து கொண்டனர்.

மேலும், தலைமைச் செயலாளர், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர், பொது துறை செயலாளர், தொழில் துறை செயலாளர், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக உபயோக சிலிண்டர் கையிருப்பு மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களின் கோரிக்கை உள்ளிட்டவை தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் 20 நாட்களுக்கு கையிருப்பு உள்ளதாகவும் வணிக சிலிண்டர் மட்டுமே தட்டுப்பாடாக உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்ததாகவும் கூறினார். கேட்டரிங் உரிமையாளர்களை பொறுத்தவரை வரும் நாட்களில் திருமணங்களுக்கு உணவு சமையல் செய்ய சிலிண்டர் கட்டாயம் வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அரசு ஏதாவது சலுகை அளித்தால் மின்சாரத்தை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்ததாக கூறினார்.

குறிப்பாக பெட்ரோலியத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தமிழ்நாடு அரசால் என்ன செய்ய முடியுமோ அவற்றை அரசு உறுதியாக செய்யும் என்று ஹோட்டல் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். குறிப்பாக சட்டத்திற்கு புறம்பாக யாராவது பதுக்கல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். இதைத் தவிர்த்து ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் முதலமைச்சர் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து உரிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+