தமிழகத்தில் ஒரு லட்சத்தை நெருங்கும் ஆக்டிவ் கேஸ்கள்.. சென்னையின் நிலைதான் மிக மோசம்..ஷாக் ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை நெருங்குகிறது.
இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தினசரி கொரோனா பரவல் 3.46 லட்சமாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தினசரி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 13,776 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று மட்டும் பதிவு செய்யப்பட்ட கொரோனா உயிரிழப்புகள் 78ஆக அதிகரித்துள்ளது. அதேபோல நேற்று ஒரே நாளில் மட்டும் 8,078 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாநிலத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 89,28ஆக இருந்தது. இது ஒரே நாளில் 95,048ஆக அதிகரித்துள்ளது. அதில் கிட்டதட்ட பாதி பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாநிலத்திலுள்ள சுகாதார கட்டமைப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.

எச்சரிக்கை
மேலும், தலைநகர் சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு வரும் மே 15ஆம் தேதி 19 ஆயிரமாக அதிகரிக்கலாம் எனத் தேசிய தொற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் சென்னையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 1.25 லட்சமாக உயரும் எனவும் இதனால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நோய் பரவலைச் சென்னையில் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.

சென்னை
தற்போதும் தலைநகர் சென்னையிலேயே கொரோனா தொற்று மோசமாக உள்ளது. நேற்று மட்டும் சென்னையில் புதிதாக 3842 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்த நிலையில், 2820 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தலைநகர் சென்னையில் தற்போது 31170 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications