அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு.. எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறிய அஜித்குமார்!
சென்னை: நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் மறைவுக்கு தொலைபேசி வாயிலாக எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு அஜித்குமார் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அஜித்குமாரின் தந்தை பெயர் சுப்ரமணியம் மார்ச் 24ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் அவதிப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி சுப்ரமணியம் நடிகர் அஜித்குமாரின் பெசன்ட் நகர் வீட்டில் உயிரிழந்தார். இதனையடுத்து நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர்கள், குடும்பத்தினர் மட்டும் பங்கேற்ற இறுதிச்சடங்கு நடைபெற்றது.

அஜித்குமார் தந்தை உயிரிழப்பு
வீட்டிலிருந்து மின் மயானத்துக்கு ஆம்னி வேனில் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சுப்ரமணியம் உடல் கொண்டு செல்லப்பட்டது. மின் மயானத்தின் வாசலில் இருந்து அவரின் உடலை அஜித்குமார் சோகத்துடன் சுமந்து சென்றார். பின்னர் எந்த பரபரப்பும் இல்லாமல் சுப்ரமணியத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நேரில் சென்ற ஜெயக்குமார்
நடிகர் அஜித்குமார் தந்தை சுப்ரமணியத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர். அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

ஆறுதலும், வாழ்த்தும்
இந்த நிலையில் தந்தை சுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது நடிகர் அஜித்குமார், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அரசியல் சர்ச்சைகளில் சிக்காத அஜித்குமார்
எப்போதும் அரசியல் குறித்த சர்ச்சைகளில் சிக்காமல் இருந்து விலகியே இருக்கும் நடிகர் அஜித்குமார், எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியுள்ளது பேசுபொருளாகி உள்ளது. முன்னதாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்த போது, பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்த அஜித்குமார், சென்னை திரும்பிய பின்னர் குடும்பத்துடன் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications