அந்த பிரச்சினையை பேச சீமானுக்கு தைரியமில்லை.. விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார்.. நடிகர் அனு மோகன்
சென்னை: சினிமாவில் ஜாதி பிரிவினை இருக்கிறது, அது வெளிச்சத்துக்கு வருவதில்லை என நடிகரும் இயக்குநருமான அனு மோகன் தெரிவித்துள்ளார்.
டேவிட் ஸ்டான்லி எனும் இயற்பெயரை கொண்டவர் அனு மோகன். இவர் நடிகரும் இயக்குநருமாவார். இவர் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்துள்ளார். 1980 களில் இது ஒரு தொடர் கதை, நினைவுச் சின்னம் ஆகிய திரைப்படங்கள் மூலம் தனது பணியை தொடங்கினார்.

கே.எஸ் ரவிக்குமாரின் படையப்பா படத்திலும் இவர் படித்திருப்பார். பாம்பு புத்துக்குள்ள கைவிட்டீங்களே கடிக்கலையா என ரஜினியை எப்போது பார்த்தாலும் கோவை தமிழில் கேட்பார். அதன் பிறகு லிங்கா படத்திலும் அவர் நடித்துள்ளார்.
காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். இவர் டப்பிங் கலைஞராகவும் அறியப்படுகிறார். இவர் சிறந்த எழுத்தாளரும் கூட! பங்காளி, மாமன் மகள் ஆகிய படங்களில் வசனகர்த்தா ஆவார். அது போல் இவர் டெலிவிஷன் தொடர்களிலும் நடித்துள்ளார். சுந்தரவனம், கோகுலம் வீடு, கிருஷ்ணா காட்டேஜ், நந்தினி, ஜோதி, கனா காணும் காலங்களில் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார்.
இவர் விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் இவர் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டியை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விவேக் இறந்து இரு ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் இறந்துவிட்டதாக தகவல் வந்த போது தமிழ் சினிமாவில் சிரிப்பு என்பதே போய்விட்டது என்றுதான் நான் நினைத்தேன்.

ஒருத்தர் இல்லை என்றால் இன்னொருத்தர் வருவார். இது அழிந்து போகும் தொழில் இல்லை. தமிழகத்தில் என் பெயர் அனு மோகன் என பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால் என்னை பார்த்தால் "நீங்க தானே சார் அந்த பாம்பு புத்துக்குள்ள கைவிட்டது" என்று கேட்பார்கள். அதே நான் கேரளாவுக்கு சென்றால் நீங்களல்ல புறாவுக்கு பெல் அடிச்சது என விஜயின் மின்சார கண்ணா படத்தின் வசனத்தைதான் கேட்பார்கள்.
மம்முட்டி, மோகன்லாலை விட விஜய்க்கு கேரளாவில் ரீச் அதிகம். இன்று அவர் சூப்பர்ஸ்டாராக இல்லாமல் இருக்கலாம். ஆனால் என்றாவது ஒரு நாள் அது நடக்கும். வடிவேலுவே இப்போது வேலையில்லாமல் இருக்கிறார், அவர் எப்படி மற்றவர்களுக்கு வேலைத் தர முடியும். ஆரம்பத்தில் அவருடன் இருந்த சிலருக்கு நிறைய வாய்ப்புகளை தந்தார்.
ஆனால் இப்போது அவருக்கே பெரியதாக வாய்ப்பில்லை எனும் போது மற்றவர்களுக்கு எப்படித் தருவார். சினிமாவில் ஜாதி பிரிவினை இருக்கு. ஜாதி வெறித்தனம், ஜாதி வெளிப்பாடு இருந்துட்டுதான் இருக்கு. அது வெளிச்சத்துக்கு வருவதில்லை. ஜாதி வாரியா மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த போறதா சொல்றாங்க. அதுவே மிகப் பெரிய தவறு. அரசியலுக்குள் ஜாதி வந்துவிட்டால் நாடு விளங்காது.
இந்திக்காரர்களை தமிழகத்தை விட்டு வெளியே போக சொல்ல சீமான் யார், ஒவ்வொரு இந்தியனும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம். இதே தமிழர்கள் பெங்களூருவில் இருக்கிறார்கள். அவர்களை கர்நாடகாவை விட்டு வெளியே போ என சீமான் சொல்வாரா? டெல்லியில் கூட தமிழர்கள் இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு அரசியல் விளையாட்டு. வேறு பிரச்சினையை எடுக்க சீமானுக்கு வக்கில்லை.
ஜாதி, மதம், இனம், மொழியை வைத்து விமர்சனம் செய்யக் கூடாது. அமைச்சர்கள் சிலர் மேடையில் ஜாதியை சொல்லி பேசுவதை பார்க்கும் போது அரசியல் கீழ்த்தரமாக போய்டுச்சி என்றுதான் தோன்றுகிறது. கேவலமா இருக்கு! சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கும் போது இந்த வழி எதற்கு என அனு மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications