கட்டாய மதமாற்றம்- கர்ப்பிணி மனைவி நடிகை திவ்யா சித்ரவதை-படப்பிடிப்பில் நடிகர் அர்ணவ் அதிரடி கைது!
சென்னை: கர்ப்பிணி மனைவியான சின்னத்திரை நடிகை திவ்யாவை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்த புகாரில் சீரியர் நடிகர் அர்ணவ் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சின்னத்திரையில் கேளடி கண்மணி சீரியல் மூலம் அறிமுகமாகி மகராசி தொடரில் நடித்தவர் கர்நாடகாவை சேர்ந்த நடிகை திவ்யா ஸ்ரீதர். தற்போது செவ்வந்தி தொடரில் நடித்து வருகிறார்.
நடிகை திவ்யா, செல்லம்மே சீரியலில் நடித்து வரும் நடிகர் அர்ணவ் என்ற நைனா முகமத்தை திருமனம் செய்து கொண்டார். 2017-ம் ஆண்டு முதல் திருமணம் செய்யாமலேயே இணைந்து வாழ்ந்த இருவரும் கடந்த ஜூன் மாதம் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

திவ்யா கதறல் வீடியோ
இதனிடையே நடிகை திவ்யா திடீரென வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் கணவரான நடிகர் அர்ணவ் கர்ப்பிணியாகிய தம்மை துன்புறுத்துகிறார்; கட்டாய மதமாற்றம் செய்தார் என பல்வேறு புகார்களை கண்ணீரும் கம்பலையுமாக தெரிவித்திருந்தார். நடிகர் அர்ணவ் சித்ரவதை செய்து அடித்து உதைத்ததால் தன் வயிற்றில் இருக்கும் கரு கலையும் நிலையில் இருக்கிறது எனவும் கதறி இருந்தார் திவ்யா.

அர்ணவ் மீது வழக்கு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அடுத்தடுத்து வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார் திவ்யா. இன்னொரு சீரியல் நடிகையுடன் அர்ணவ்-க்கு தொடர்பிருப்பதாகவும் அவருக்காகவே என் கருவை கலைக்கும் நோக்கத்தில் எட்டி உதைத்தார் அர்ணவ் எனவும் திவ்யா கூறியிருந்தார். இதனடிப்படையில் போரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அர்ணவ் மீது 3 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

கரு கலைப்பு நாடகம்
ஆனால் நடிகை திவ்யாவின் இந்த புகார்களை நடிகர் அர்ணவ் திட்டவட்டமாக மறுத்தார். அத்துடன் ஆவடி காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடிகை திவ்யா மீது அர்ணவ் புகாரும் கொடுத்தார். அந்த புகாரில், மனைவி திவ்யா, ஈஸ்வர் என்பவருடன் சேர்ந்து மூன்று மாத கருவை கலைக்க நாடகம் நடத்துகிறார். இதனால் மனைவி திவ்யா, ஈஸ்வர்,மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். மேலும் நடிகை திவ்யா மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அர்ணவ் குற்றம் சாட்டி இருந்தார்.

படப்பிடிப்பில் அதிரடி கைது
இந்நிலையில் நடிகர் அர்ணவ், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போரூர் அனைத்து மகளிர் காவல்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தமக்கு கண்ணில் காயம் ஏற்பட்டிருப்பதால் விசாரணைக்கு ஆஜராக இயலாது என அர்ணவ் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று அர்ணவ் விசாரணைக்கு வர உத்தரவிட்டனர் போரூர் போலீசார். இன்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் பூவிருந்தவல்லி அருகே நேமம் பகுதியில் படப்பிடிப்பில் இருந்த அர்ணவ்வை நடிகை திவ்யாவை சித்ரவதை செய்ததாக போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications