டேனியல் பாலாஜிக்கு மதியம் முதல் நெஞ்சு வலி! கடைசி 2 மணி நேரம்! மருத்துவமனையில் இரவு நடந்தது என்ன?
சென்னை: நடிகர் டேனியல் பாலாஜிக்கு சிகிச்சை அளித்த சென்னை கொட்டிவாக்கம் தனியார் மருத்துவமனையின் மருத்துவர், கடைசி 2 மணி நேரம் நடந்தது என்ன என்பதை விளக்கியுள்ளார்.
இதுகுறித்து டேனியல் பாலாஜிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கல்யாண சுந்தரம் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: டேனியல் பாலாஜி இதுவரை எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதில்லை. கடந்த 29ஆம் தேதி இரவுதான் மாரடைப்புடன் டேனியல் வந்தார்.

இதயம் பம்ப் செய்யாத நிலைமை இருந்தது. இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் மாரடைப்பு. டேனியலுக்கு 29ஆம் தேதி மதியம் முதல் நெஞ்சு வலி இருந்ததாக தெரிகிறது. அவரை அழைத்து வந்தது இன்னொரு மருத்துவர்தான்.
எல்லா ஹார்ட் அட்டாக்குகளும் கார்டியாக் அரெஸ்ட்டாக மாற வேண்டிய அவசியம் இல்லை. கார்டியாக் அரெஸ்ட் என்பது ஒரு இறுதி கட்டம். அதிலிருந்து நோயாளியை காப்பாற்றுவதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவாகும். நெஞ்சு வலி வந்ததும் வந்தால் உயிர் பிழைக்க வைக்க வாய்ப்புகள் அதிகம். அதிலும் கேரண்டி கொடுக்க முடியாது.
ஒவ்வொருவருக்கு மாரடைப்பு வேறுபடும். அதில் கோல்டன் ஹவர், பொன்னான நேரம் என்றால் அது வலி வந்து முதல் ஒரு மணி நேரம்தான். டேனியல் பாலாஜி வரும் போதே கார்டியாக் அரெஸ்ட்டுடன்தான் வந்தார். துரதிருஷ்டவசமாக அவரை காப்பாற்ற முடியவில்லை.
அவருடைய ஈசிஜியை பார்த்தால் இடது பக்கத்தில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது போல் தெரிகிறது. 2 மணி நேரம் அவருக்கு சிபிஆர், இதயத்தில் ஷாக் வைப்பது போன்ற சிகிச்சைகளை அளித்தோம். ஆனால் பலனில்லை. அதன் பிறகு எந்த பிரயோஜனமும் இல்லை என்பதால் அந்த சிகிச்சைகளையும் நாங்கள் நிறுத்திவிட்டோம்.
சில சமயங்களில் கார்டியாக் அரெஸ்ட்களின் போது இதயத்தை கூட சிகிச்சை கொடுத்து இயக்க வைத்துவிடலாம். ஆனால் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு சில நிமிடங்களுக்கு மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் செல்லவில்லை என்றால் மூளை பாதிப்பு ஏற்படும்.
கார்டியாக் அரெஸ்ட் என்பது நெஞ்சில் அழுத்தம் கொடுத்தது போல் இருக்கும், அது தோள்பட்டைகளுக்கு பரவும் என்பார்கள். இது சரிதான், ஆனால் எல்லாருக்கும் இதே போன்று இருக்காது. அதாவது தொப்புள் முதல் காது வரை இதுவரை ஏற்படாத அளவுக்கு வலி ஏதாவது இருக்கிறதா என பார்க்க வேண்டும்.
சிலருக்கு நெஞ்சு எரிச்சல் இருக்கும், அஜீரண கோளாறு போல் இருக்கும், முதுகு வலி போல் இருக்கும். சிலர் பல் மருத்துவரிடம் போய் பற்களை கூட எடுத்திருப்பர். எனவே இது ஹார்ட் அட்டாக்தானா என்பதை நோயாளியே யூகிப்பது மிகவும் கடினம். எனவே அது போல் அரிதான அறிகுறிகள் இருந்தால் மருத்துவமனைக்கு வந்துவிட வேண்டும்.
ரத்த பரிசோதனையில் அசாதாரண சூழல் தெரிவதற்கு 2 முதல் 4 மணி நேரம் வரை ஆகும். அது போல் முதல் ஈசிஜியிலும் நார்மலாக இருக்கும். இதனால் எல்லாம் நார்மலாக இருக்கிறதே என டிஸ்சார்ஜ் ஆகி செல்லக் கூடாது. புது அறிகுறி வந்தால் உடனே மருத்துவமனை வந்துவிட வேண்டும். மாரடைப்பு வராமல் இருக்க புகைப்பழக்கம் இருக்கக் கூடாது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். தூக்கம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். உடலுக்குத் தேவையான பரிசோதனைகளை அவ்வப்போது செய்ய வேண்டும். இவ்வாறு டாக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
-
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications