லியோ படப்பிடிப்பின் போது காஷ்மீர் டீக்கடையில் வேகமாக வந்த 20 பேர்.. அஞ்சிய டேனியல் பாலாஜி.. கலகல!
சென்னை: அதிக படங்களில் நடிக்காதது ஏன் என்பது குறித்து நடிகர் டேனியல் பாலாஜியே ஒரு பேட்டியில் விளக்கியிருந்தார். மேலும் காஷ்மீரில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்தும் அவர் தெரிவித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் டேனியல் பாலாஜி. தனது குரலால் அனைவரையும் நடுங்க வைத்தவர். இவர் மருதநாயகம் படத்தின் புரொடெக்ஷன் மேனேஜராக இருந்து பின்னர் சித்தி சீரியலில் நடித்தார்.

இதன் மூலம் டேனியல் என்ற அடைமொழி அவரது பெயர் பாலாஜியுடன் ஒட்டிக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பொல்லாதவன், பைரவா, வேட்டையாடு விளையாடு, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு திடீரென நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
தனது பாடி லேங்வேஜ், குரல், முக பாவனை என அனைத்தின் மூலமும் வில்லத்தனத்தை ஒரு சேர கொண்டு வருவார். வில்லன் ரோல்கள் டேனியலுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. இவர் நடிப்பு கல்லூரியிலும் படித்துள்ளார். இவர் லியோ படப்பிடிப்பின் போது ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதை பார்க்கலாம். "நான் குறைவான படங்களில் மட்டுமே நடிப்பதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மை அது கிடையாது. எனக்கு பயம் அதிம். நாம எதையாவது செய்ய போய் அது மொக்கையாகிவிட்டால் என்ன செய்வது? என்ற பயம்தான். எனவே முடிந்தவரை வித்தியாசமான கதாபாத்திரமோ அல்லது கதாபாத்திரத்தை வித்தியாசமாக பண்ண முடியும் என தோன்றினாலோ அதை நான் எடுக்கிறேன்.
எல்லாமே பூவாக்காக (சாப்பாடு) சில படங்களை அவ்வப்போது செய்கிறேன் என்பதை மறுக்க முடியாது. எனக்கே தெரியும் அந்த படம் தேறாதுனு. இருந்தாலும் நண்பர்கள்தான் அந்த படத்தை எடுத்திருப்பார்கள். "ரெண்டு சீன்ல நடினு" கேட்பாங்க. வெற்றி மாறனின் ஆடுகளம் படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் தூரமாக நின்று வேடிக்கை பார்த்தேன்.
வெற்றி மாறன் படங்களில் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறேன். ஆன்மீகம் , பக்தி என இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாத்தீகம் பேசுபவன் கூட ஆத்தீகத்தை விமர்சிப்பதற்காக அதை அதிகம் அறிந்துக் கொள்கிறான். லியோ படப்பிடிப்பிற்காக காஷ்மீர் சென்ற போது அங்குள்ள செக்யூரிட்டி ஆபிசர் என்னை அடையாளம் கண்டு கொண்டார்.
அவர் பைரவா படத்தின் இந்தி டப்பை பார்த்துவிட்டு என்னிடம் அதிகம் பேசினார். அவர் அந்த படத்தை விரும்பி பார்த்துள்ளார். அது போல் காஷ்மீரில் மலை கிராமத்தில் கடும் குளிரில் டீ சாப்பிட சென்றோம். ஒருவர் என்னை பார்த்துவிட்டு 20 பேரை அழைத்துவிட்டார். எனக்கு பயம் வந்துவிட்டது. உடனே அவர்கள் பாக்கெட்டில் கையை விட்டனர். பயம் மேலும்அதிகரித்தது, செல்போனை கொடுத்து செல்பி எடுக்க வேண்டும் என கேட்டனர். அப்போதுதான் நிம்மதி அடைந்தேன். அடப்பாவிகளா இதுக்கா இவ்வளவு பில்டப் கொடுத்தீங்கன்னு பயந்துவிட்டோம் என பழைய பேட்டியில் கலகலவென டேனியல் பாலாஜி பேசியுள்ளார்.
இப்படி நடிப்பிலும் தனது குணாதியசத்தாலும் நற்பெயரை பெற்ற டேனியல் பாலாஜியின் இறப்பு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேட்டையாடு விளையாடு அமுதன் கேரக்டரை எண்ணி எண்ணி இனி இந்த அமுதனை எப்போது பார்ப்போம் என கண்ணீர் வடிக்கிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications