டேய் பைத்தியம்..வாழ்த்து சொன்ன தனுஷ் போஸ்ட்டில் கடுப்பான அஸ்வின்! ரோகித் ஷர்மா பெயரால் வந்த கோபம்
சென்னை: நாட்டின் 76 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது, கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஸ்வினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவிக்க அதில் ரசிகர் ஒருவர் கொடுத்த பதிலால் கோபமடைந்த அஸ்வின் 'டேய் பைத்தியம்' என கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரிட்டிஷ் அரசிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று குடியரசு நாடாக மாறிய நாள் ஜனவரி 26. அந்த நாள் குடியரசு தின விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று குடியரசு தின விழா நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

குடியரசு தின விழாவை முன்னிட்டு மத்திய அரசு ஆண்டுதோறும் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை அறிவிக்கும். கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், வர்த்தகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது,
அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. நல்லி குப்புசாமி செட்டி, நடிகர் அஜித்குமார், நடிகை சோபனா, செஃப் தாமு உள்ளிட்டவருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக விளையாட்டு துறையில் சாதனை புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக ஜொலித்த அஸ்வின் தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்தவர்.

ஒருநாள், டி 20, டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக விளையாடி இந்திய அணிக்கு பல்வேறு தருணங்களில் வெற்றி தேடி கொடுத்தவர். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அடிலெய்டு டெஸ்டில் விளையாடிக் கொண்டிருந்து போது தனது ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ள அவர் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக அதிக விக்கெட் கைப்பற்றிய சுழற் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
105 டெஸ்ட், 116 ஒரு நாள், 63 டி20 போட்டியில் விளையாடியுள்ளார். மொத்தமாக 765 விக்கெட் கைப்பற்றி உள்ளதோடு 4,394 ரன்களையும் பெற்றுள்ளார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் களமிறக்கப்படாததால் அஸ்வின் ஓய்வை அறிவித்ததாக கூறப்பட்டது. ஆனால் தனக்கு படித்த நேரத்தில் பிடித்த தருணத்தில் தான் ஓய்வை அறிவித்திருப்பதாகவும், இதில் யாருக்கும் எந்த தொடர்பும் இல்லை யாராலும் தான் பாதிக்கப்படவில்லை என பல தருணங்களில் அஸ்வின் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் அஸ்வின் விளையாட்டு துறைக்கு ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இதை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல நடிகர் தனுஷ் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தனுஷ்," மதிப்புமிக்க பத்மபூஷன் விருது பெற்ற அஜித் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வினுக்கும் வாழ்த்துக்கள்" என பதிவிட்டிருந்தார். அவரது பதிவில் அஸ்வினும் நன்றி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே அஸ்வின் பதிலுக்கு பதில் அளித்திருந்த ரோகித் சர்மாவின் ரசிகர் ஒருவர்," நீங்கள் ரோகித் சர்மாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவர்தான் உங்களுக்கு சாப்பாடு போட்டார்" என பதிவிட்டிருந்தார். இதனால் கோபமான அஸ்வின் பைத்தியம் என திட்டியுள்ளார். ஏற்கனவே இந்திய அணியில் இருந்து ரோஹித் சர்மாவால் அஸ்வின் ஓரங்கட்டப் பட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் ஓய்வு அறிவித்ததாக கூறப்படும் நிலையில் ரோகித் சர்மா குறித்த பேச்சால் கோபமடைந்த அஸ்வின் ரசிகரை மிகக் கடுமையாக திட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications