சத்திரியனுக்கு சாவில்லை.. பள்ளி பாடபுத்தகத்தில் விஜயகாந்த்.. நா தழுதழுத்த நடிகர் ஜெயம் ரவி
சென்னை: பள்ளிப் பாடபுத்தகத்தில் கேப்டன் விஜயகாந்த் குறித்த பாடம் இடம் பெற வேண்டும் என நடிகர் ஜெயம்ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.
கருப்பு எம்ஜிஆர் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். இவர் நடிகர், ஸ்டன்ட் கலைஞர், நகைச்சுவையாளர், அரசியல்வாதி எல்லாவற்றையும் தாண்டி நல்ல மனிதன் என்பதால்தான் இவரை பற்றி கடைக்கோடியில் உள்ள மக்களும் பேசி வருகிறார்கள்.

அவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நிமோனியா பாதிப்பால் காலமானார். அவருக்கு ஏராளமானோர் தங்கள் கண்ணீரை காணிக்கையாக்கினர்.
இன்றும் அவரை நல்லடக்கம் செய்த தேமுதிக அலுவலகத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த விழாவில் பலர் விஜயகாந்த் குறித்து பேசினர்.
அவற்றில் கமல்ஹாசன், ஜெயம் ரவி, தயாரிப்பாளர் சிவா உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். இந்த விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், விஜயகாந்த் பல்வேறு அவமானங்களையும் விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார். இதனால் அவர் பட்ட அவமானங்களை பிறர் படக் கூடாது என நினைத்தார். அவர் கொடுப்பது பிறருக்குத் தெரியாது.
எனக்கு அவரிடம் பிடித்ததே அவருடைய கோபம்தான். ஆனால் அதில் நியாயம் இருக்கும் என்றார் கமல்ஹாசன். இதையடுத்து ஜெயம் ரவி பேசினார். அவர் கூறுகையில், எல்லோரும் இறந்த பிறகு சிலரை மட்டும்தான் கடவுள் என சொல்வார்கள். ஆனால் ஒருத்தர்தான் வாழும் போதே கடவுளாக இருந்திருக்கிறார்.
பள்ளிப் பாடப்புத்தகத்துல நடிகர் விஜயகாந்த் பற்றி வரணும். அவர் சொன்னதைத்தான் நான் சொல்ல நினைக்கிறேன். சத்தியனுக்குச் சாவில்லை என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சிவா பேசுகையில், கேப்டன்தான் என்னை தயாரிப்பாளராக்கினார். நடிகர் சங்கத் தேர்தலில் அவரை ராதாரவியும், வாகை சந்திரசேகரும் போட்டியிட வைத்தார்கள்.
அப்போது நடிகர் சங்கம் கடனில்தான் இருந்தது. இதற்காக மலேசியாவில் நடிகர் சங்க விழாவை நடத்தினார். நிகழ்ச்சி முடிவடைந்ததும் வசூல் குறித்து அங்குள்ள ஏற்பாட்டாளரிடம் கேட்டார். அப்போது அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஜயகாந்தை ஏமாற்ற நினைத்தார். உடனே கோபமடைந்த விஜயகாந்த், அவருடைய கன்னத்தில் அறைந்து கேட்டதும் அந்த ஏற்பாட்டாளர் உண்மையை ஒப்புக் கொண்டார்.
அதன் பிறகு கிடைத்த பெரிய தொகையை வைத்து கடனை அடைத்தார். இப்படி விஜயகாந்த் நடிகர் சங்கத்திற்காக ரத்தத்தை சிந்தியிருக்கிறார். இவ்வாறு தயாரிப்பாளர் சிவா தெரிவித்திருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications