41 பேர் மரணம்! வெகுளியாக பேசிவிட்டேன்! hurt செய்யும் நோக்கம் இல்லை! துளியும் சோகமில்லாமல் சொன்ன ஜீவா
சென்னை: "படிச்சி படிச்சி சொன்னோமேடா, கண்டிஷன்ஸை பாலோ பண்ணுனு கேட்டீங்களாடா" என்ற டயலாக்கை இயக்குநர் சொல்லித்தான் பேசினேன், மற்றபடி யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என நடிகர் ஜீவா விளக்கமளித்துள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக கூட்டத்தில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துவிட்டனர். இறந்தவர்களை பார்த்த அமைச்சர் அன்பில் மகேஷ், கண்கலங்கி, "ரூல்ஸை பாலோ பண்ணுங்கடான்னு சொன்னோமே" அழுதார்.

இத்தனை விலை மதிக்க முடியாத உயிர்கள் இறப்பின் போது பேசப்பட்ட வசனத்தை நடிகர் ஜீவா தனது "தலைவர் தம்பி தலைமையில்" என்ற படத்தில் காமெடிக்காக பயன்படுத்தியிருந்தார். மேலும் இந்த படத்தின் நிகழ்ச்சியிலும் அவர் மேடையில் இந்த டயலாக்கை காமெடியாக சொன்னார்.
இதனால் ஜீவாவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. ஒன்றரை வயது குழந்தை ஒன்று கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு நகர்ந்து குடல் வெளியே வந்து, தலை எல்லாம் நசுங்கி கொடூரமாக இறந்திருந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
இந்த இறப்புகளை பார்த்து மனம் வெம்பி அமைச்சர் சொன்ன வசனத்தை ஜீவா, காமெடிக்காக சொல்லியிருந்தார். இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் இதற்கான விளக்கத்தையும் சிரித்தபடியே கூறியிருந்தார் ஜீவா.
இதுகுறித்து ஜீவா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: டிரென்டிங் என்ற ஒரு விஷயத்திற்கு ஏற்றாற் போல செய்துக் கொண்டிருக்கிறோம். இதை இயக்குநர்கிட்ட கேட்க வேண்டிய கேள்வி.
அவர்தான் இந்த நேரத்தில் அந்த டயலாக் போட்டால் நன்றாக இருக்கும் என்றார். நானும் அந்த டயலாக்கை வெகுளியாக பேசிவிட்டேன். அதற்கு மக்களிடம் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. மற்றபடி யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. இது முழுக்க முழுக்க காமெடிக்காகவே வைக்கப்பட்டது என ஜீவா விளக்கமளித்துள்ளார்.
தனக்கு எதிராக கண்டனங்கள் எழுந்த போதிலும் இந்த பிரஸ்மீட்டில் ஜீவா சிரித்தபடியே விளக்கமளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறைந்தபட்சம் தான் பேசியதற்கு வருத்தமோ மன்னிப்போ அவர் கேட்கவில்லை. இதனால் அவரை மேலும் நெட்டிசன்கள் விமர்சிக்கிறார்கள். அதாவது இயக்குநர் சொன்னால் என்ன வேணாலும் பேசுவீங்களா என கேட்கிறார்கள். படத்தில் பேசியது மட்டுமல்லாமல் அந்த படத்தின் நிகழ்ச்சியிலும் சிரித்தபடியே பேசியதும் அதற்கு உடன் இருந்தவர்கள் கை தட்டியதும் அருவருப்பாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள்.
ஜீவா நடிப்பில் அண்மையில் வெளியானது "தலைவர் தம்பி தலைமையில்" என்ற திரைப்படம். இதற்கு மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு இதுவரை 11 கோடிக்கு மேல் வசூல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஜீவா பஞ்சாயத்து தலைவராக நடித்துள்ளார். தம்பி ராமையாவின் நடிப்பும் சிறப்பாக உள்ளது. 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே இந்த படம் ஓடுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications