கால் வலியுடன் வந்தேன்! போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் எங்கே! கஞ்சா கருப்பு வாக்குவாதம்
போரூர்: போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என அங்கிருந்த செவிலியர்களுடன் நடிகர் கஞ்சா கருப்பு வாக்குவாதம் நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
போரூர் அரசு மருத்துவமனைக்கு காது வலிக்கு சிகிச்சை பெற நடிகர் கஞ்சா கருப்பு 10 மணிவாக்கில் சென்றிருந்தார். அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் இல்லாததால் அவர் செவிலியர்களுடன் வாக்குவாதம் செய்தார்.

அங்கிருந்த நோயாளிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கஞ்சா கருப்பு கூறுகையில், நான் கால் வலிக்காக போரூர் அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அங்கு சித்த மருத்துவர் மட்டுமே இருந்தார்.
"காலை 8 மணிக்கு வர வேண்டிய மருத்துவர் மதியம் 3 மணிக்குத்தான் வருவார்" என்றார். காலை 7 மணி முதலே மண்டை உடைந்து ரத்தம் சொட்ட சொட்ட நோயாளிகளும் ரத்த வாந்தி எடுத்த மூதாட்டியும் காத்திருந்தனர்.
நாய்க்கடியால் பாதித்தவர்: ஆனாலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க யாரும் வரவில்லை, மேலும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ஒருவரும் அமர்ந்திருந்தார். இப்படி அரசு மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க யாருமே இல்லை. இது வேதனையை அளிக்கிறது.
மற்ற ஊர்களில் எல்லாம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் சென்னையில் மட்டும் சில இடங்களில் இது போன்ற நிலை உள்ளது. ஏன் சென்னையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் சம்பளம் வாங்கவில்லையா?
வரிப்பணத்தில் ஊதியம்: நம் வரிப்பணத்தில் ஊதியம் வாங்கிக் கொண்டு தான் வைத்திருக்கும் கிளினிக்கில் சிகிச்சை கொடுத்துவிட்டுதான் அரசு மருத்துவமனைக்கு வருவார் என்றால் அப்படிப்பட்ட மருத்துவமனையே தேவையில்லை. இதை மூடிவிடலாமே, ஆபத்து நேரத்தில் மருத்துவர்கள் இல்லாத நிலையால் 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
உயிருக்கு போராடினால் சிகிச்சை இல்லை: அவர்கள் எல்லாம் தற்போது வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிருக்கு போராடிய மூதாட்டியை நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையிலிருந்து வேறு மருத்துவமனைக்கு அங்கிருந்த பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்த மருத்துவர் மட்டுமே இருக்கிறார், அவர் எப்படி அவசர கால சிகிச்சை அளிக்க முடியும் என கஞ்சா கருப்பு கேள்வி எழுப்பினார்.
துணை மேயர் பதில்: இதுகுறித்து புதிய தலைமுறை நியூஸ் சேனலுக்கு துணை மேயர் மகேஷ் அளித்த பேட்டியில், போரூர் அரசு மருத்துவமனை மாநகராட்சிக்குள்பட்டு வராது. எனினும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.
தைப்பூச விடுமுறை: மேலும் இன்று விடுமுறை என்பதால் சுழற்சி அடிப்படையில் மருத்துவர்கள் பணியாற்றுகிறார்கள். அதில் அந்த மருத்துவருக்கு என்ன பிரச்சினை என தெரியவில்லை. இதை விசாரித்துதான் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு திடீரென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். இது போல் டூட்டி நேரத்தில் பணியில் இல்லாதவர்களுக்கு மெமோவும் வழங்கியிருக்கிறார். அந்த மருத்துவமனையிலேயே அவர் அந்த மருத்துவரை தொலைபேசியில் அழைத்து கடிந்து கொண்டிருக்கிறார். மேலும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்திருப்பது தவறு என்ற ஒரு சட்டமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது போல் திடீர் ஆய்வுகள்தான் ஏழை மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வழிவகுக்கும் என தெரிகிறது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications