சென்னையை சூழ்ந்த பெருவெள்ளம்.. செயின் மோதிரத்தை விற்று உதவியவர் மயில்சாமி.. நினைவேந்தலில் புகழாரம்
சென்னை: நடிகர்கள் மயில்சாமி, மனோபாலா ஆகியோர் கடன் வாங்கி தானம் செய்தவர்கள் என நினைவேந்தல் நிகழ்ச்சியில் பலர் பாராட்டியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து மக்களை தொடர்ந்து குஷிப்படுத்தியவர்கள் டி.பி.கஜேந்திரன், மயில்சாமி மற்றும் மனோபாலா ஆகியோர் இந்த ஆண்டு காலமானார்கள்.

அவர்களின் மறைவு தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளானது. அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது: இவங்க மூவருமே பேசுவதற்கு முன்னாடி அவர்களை பார்த்தாலே சிரிப்பு வரும். அந்த அளவுக்கு மக்களை மகிழ்வித்தவர்கள். டிபி கஜேந்திரன் எப்பவுமே சந்தோஷமா இருப்பாரு, நடிகர் சங்கத்திற்கும் பக்கபலமாக இருந்தார். எப்போதுமே பாசிட்டிவாக இருக்குறவரு பெரிய ஆளுமை உள்ள மனுஷன் அவர்.
மயில்சாமி சார் எனக்கு சிறுத்தை படத்திலிருந்து பழக்கம், தனக்கு மிஞ்சியது தான் தானம்னு சொல்வாங்க. ஆனால் தானத்துக்கு மிஞ்சியது தான் தனக்கு என வாழ்ந்தவர் அவர். கடன் வாங்கி தானம் பணணினார், சென்னை பெருவெள்ளம் சமயத்தில் அவரிடம் இருந்த செயின், மோதிரத்தை விற்று நிறைய பேருக்கு உணவளித்தார்.
யாருக்காகவும் உதவி கேட்க அவர் தயங்கவே மாட்டார். எம்ஜிஆரின் தீவிர தொண்டனாக இருந்து அவரைப் போலவே வாழ்ந்தவர். அவரது இழப்பு ஏற்றுக் கொள்ள முடியாதது. மனோபாலா எல்லாரையும் சிரிக்க வைக்கும் குணம் கொண்டவர். நடிகர் சங்கத்தில் ஏதேனும் பெரிய நடத்தினால் அவர் பொறுப்பாக முன்னெடுத்து நடத்துவார். அதே போல் ஏதாவது பிரச்சினை வந்தாலோ வாக்குவாதம் நடந்தாலோ சமாதானப்படுத்த முதல் ஆளாய் வருவார்.
ஈகோ இல்லாத மனிதன் அவர் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லாருடனும் ஈஸியாக பழகக் கூடிய மனிதர் அவர். இவர்கள் மூவரையும் இழந்தது எங்களுக்கு மிகப் பெரிய இழப்பாக உள்ளது என கார்த்தி பாராட்டுகளை தெரிவித்தார். மயில்சாமி கஜா புயலின் போதும் அவர் வண்டி நிறைய பொருட்களுடன் கஜா புயல் பாதித்த இடங்களுக்கு கொண்டு சென்றார்.
அதிலும் தான் கொடுத்தது மட்டுமல்லாமல் மற்ற நடிகர், இயக்குநர்களிடமும் பிறருக்கு உதவி செய்யுமாறு கேட்கும் நபர் மயில்சாமி. ஒரு முறை தனக்கு ஆட்டோ கட்டணம் கூட இல்லாமல் தனக்கு கிடைத்த ஊதியத்தை அப்படியே தனது மேனேஜர்களுக்கு கொடுத்த மயில்சாமி, கடைசியில் ஆட்டோவுக்காக தன்னிடம் கடன் வாங்கியிருந்தார் என நடிகர் விவேக் தெரிவித்திருந்தார். அது போல் மனோபாலாவும் தன்னுடைய உதவி இயக்குநர்களுக்காக அதிக உதவிகளை செய்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications