Srikanth: என்னாது விக்ரமின் ஜெமினி படத்தில் நடித்தவர் ஸ்ரீகாந்தின் தந்தையா? செய்யாறு பாலு தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்தின் தந்தை கிருஷ்ணமாச்சாரியும் ஒரு நடிகர்தான். அவர் எந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதை பார்க்கலாம். விக்ரம் படத்தில் நடித்துள்ள கிருஷ்ணமாச்சாரி வேறு எந்த படங்களில் நடித்துள்ளார் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

srikanth fathr

இதுகுறித்து செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: "மனசெல்லாம்" என்ற படத்தில் ஸ்ரீகாந்த் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு பாடல் காட்சியில் தீவிபத்து ஏற்பட்டு ஸ்ரீகாந்துக்கு தீக்காயம் ஏற்பட்டது. இந்த தீவிபத்துக் குறித்து கேள்விப்பட்டு சில பத்திரிகையாளர்கள் உள்பட நான் எல்லாம் நேரில் சென்று பார்க்க சென்றோம்.

அப்போது ஸ்ரீகாந்தின் அப்பா கிருஷ்ணமாச்சாரியும் அவரது குடும்பத்தினரும் அழுதுக் கொண்டிருந்தனர். சினிமாவுக்கும் ஸ்ரீகாந்தின் குடும்பத்தினருக்கும் சம்மந்தமே கிடையாது. அப்படியிருந்தும் அவர் ஏன் சினிமாவுக்கு வரணும் என அழுது கொண்டிருந்தனர்.

ஸ்ரீகாந்த் பிழைப்பதே கஷ்டம்

ஏனென்றால் "ஸ்ரீகாந்த் பிழைப்பதே கஷ்டம்" என சொல்லிவிட்டதால் அவர்கள் அழுது கொண்டிருந்தனர். ஒரு வழியாக ஸ்ரீகாந்த் அபாய கட்டத்தை தாண்டிவிட்டார். இனிமேல் படத்தில் நடிக்க வேண்டாம் என ஸ்ரீகாந்தின் தந்தை பேசிக் கொண்டிருந்தார். அப்போது "சினிமா என்றால் ரிஸ்க் இருக்கும். எல்லா படங்களும் அப்படி அமைந்துவிடாது. இது திருஷ்டி கழிந்தாற் போல் நினைத்துக் கொள்ளுங்கள்" என நாங்கள் எல்லாம் ஆறுதல் கூறினோம்.

விருப்பத்திற்காக

ஆனால் அவர் கேட்கவில்லை. எனினும் மகன் ஸ்ரீகாந்தின் விருப்பத்திற்காக அவரை மேலும் படங்களில் நடிக்க அனுமதித்தார். அப்போது அவர் நடித்த ரோஜா கூட்டம் படத்தின் மூலம் ஸ்ரீகாந்த் பிரபலமடைந்தார். பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் அவருக்கு குறைந்துவிட்டது. பட வாய்ப்புகள் இல்லாததால் சில நடிகர்கள் போதை வஸ்துகளின் பிடியில் சிக்கும் நிலை உள்ளது.

4.75 லட்சம் ரூபாய்

ஸ்ரீகாந்த் போனில் இருந்து ஜிபே மூலம் ரூ 4.75 லட்சம் பணபரிமாற்றம் நடந்துள்ளது. ஸ்ரீகாந்தின் ரத்த மாதிரிகளை சோதனை செய்த போது அவர் போதை பொருளை பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது. ஸ்ரீகாந்த் காவல் நிலையத்திற்கு செல்லும் போது பேப்பரை வைத்து முகத்தை மூடியபடி வருகிறார்.

வேதனை

இதை பார்த்த அவருடைய குடும்பத்தினர் எத்தனை வேதனையடைந்திருப்பார்கள்? தனது மகனுக்காக வங்கி மேனேஜர் வேலையை உதறி தள்ளிவிட்டவர் கிருஷ்ணமாச்சாரி. இவர் தனது மகனுடன் சினிமா ஷூட்டிங்கிற்கு சென்று வந்தார்.

விருப்பமில்லை

அப்போதுதான் "சார் நீங்களும் நடிக்க வாங்க" என அழைத்ததால், விருப்பமில்லாவிட்டாலும் தனது மகனுக்காக ஜெமினி படத்தில் நடிகை கிரணின் அப்பாவாக நடித்தார். அதில் வட்டிக்கு பணம் கொடுக்கும் சேட்டாக நடித்திருந்தார். தில் படத்தில் முதல்வராக நடித்திருந்தார்.

துணை நடிகர்

தன்னை துணை நடிகர் ரேஞ்சுக்கு நடிக்க வைத்தார்களே என அவர் மனதில் எழுந்திருக்கும். ஆனால் இவை எல்லாமே தனது மகனுக்காகத்தான். பின்னர் ஸ்ரீகாந்த் காதல் கிசுகிசுக்களில் சிக்கி வந்தனாவை திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

புழலில் ஸ்ரீகாந்த்

நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருளான கொக்கைனை பயன்படுத்தியதாக நுங்கம்பாக்கம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரை தற்போது ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர் புழல் சிறையில் முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ளார். ஸ்ரீகாந்தை தொடர்ந்து கழுகு பட நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+