கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ
சென்னை: தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனை மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி இருக்கையில், நடிகர் மகேந்திரன் "கேள்வி கேட்டால் மட்டும் கரண்ட் வந்துடுமா?" என துடுக்காக பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து மகேந்திரன் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
ஒரு நகரம் வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதற்கு அடையாளம், தடையின்றி கிடைக்கும் மின்சாரம்தான். ஆனால், சென்னை மக்கள் கடந்த சில நாட்களாக கடும் மின்வெட்டால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் மின்வெட்டு காரணமாக டென்ஷனான மக்கள் தன்னெழுச்சியாக சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். இப்படி இருக்கையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றிருந்த நடிகர் மகேந்திரன், மின்வெட்டு பற்றி பேசியிருந்தது சர்ச்சையாக வெடித்திருந்தது.
தமிழகம் முழுவதும் பவர்கட் பிரச்சனையாக மாறியிருக்கிறதே என்று தொகுப்பாளர் கேட்க.. மகேந்திரன் கொடுத்த பதில்தான் தற்போது ஹாட் டாப்பிக். "கரண்ட் போகுதா? சோலார் சிஸ்டம் என ஒன்னு இருக்கு தெரியுமா? அதை யாராவது ட்ரை பண்ணீங்களா? முன்னாடி கரண்ட் பிரச்சனை இல்லாம ஜாலியா இருந்திட்டீங்க.. இப்போ கரண்ட் போகுது. 6 மாசத்துக்கு யாரும் அதைப்பத்தி பேசாதீங்க.. எங்க வீட்டுல கூட கரண்ட் எடுத்துக்கோங்க.
முதலமைச்சர் விஜய்யை கேள்வி கேட்டா கரண்ட் வருமா? மைக்கை நீட்டி கேள்வி கேட்டால் உடனே பவர் வந்துடுமா? கேள்வி கேட்பதை நிறுத்தினால்தான் பதிலே கிடைக்கும்" என்று பேசியிருந்தார்.
கரண்ட் இல்லாம நாங்க நொந்துபோய் இருக்கோம்.. இப்போ வந்து சோலார் சிஸ்டம், கேள்வி கேட்க கூடாதுனு சொன்னா.. என்ன நியாயம்? என்று பல்வேறு தரப்பினும் மகேந்திரனுக்கு எதிராக கொந்தளித்தனர். இப்படி இருக்கையில் மகேந்திரன் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், "நான் மக்களை கேள்வி கேட்க வேண்டாம் என்று சொல்லவில்லை. வேண்டும் என்று விமர்சிப்பவர்களைதான் அப்படி சொன்னேன் என்றும், இன்று நான் ஒரு வாய் சோறு சாப்பிடுகிறேன் என்றாலும் அதற்கு காரணம் மக்கள்தான். அவர்களை நான் எப்படி விமர்சிக்க முடியும்? மட்டுமல்லாது நான் சோலார் சிஸ்டம் என்று சொல்லியிருந்தேன். வாய் தவறி அப்படி சொல்லிவிட்டேன். நான் ஆவரேஜ் மாணவன்தான், எனவேதான் சோலார் பவர், சோலார் எனெர்ஜி என்பதற்கு பதில் மாற்றி சொல்லிவிட்டேன்" என்று கூறியிருந்தார்.
-
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
மகேந்திரன் சொன்ன தமிழக மின்சார நெருக்கடி.. 6 மாசம் கரண்ட் கட் இருந்தா என்ன? பிரபல நடிகர் விளக்கம் -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே?











Click it and Unblock the Notifications