மன்சூர் அலிகான் மகனை ஜாமீனில் விடக்கூடாது.. குறுக்கே வந்த போலீஸ்.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியிருந்த நிலையில், அவரது ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. போதைப்பொருள் வழக்கு விசாரணை நிலையில் இருப்பதால் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்திருந்தது. காவல்துறையின் வாதத்தை ஏற்று ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஜெ.ஜெ.நகர் காவல் நிலைய பகுதியில் சிலர் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கடந்த மாதம் ஜெ.ஜெ. நகர் பாரிசாலை இபி பூங்கா அருகே போதைப் பொருள் விற்பனைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (21) என்கிற கல்லூரி மாணவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவரிடம் இருந்து 17 எல்.எஸ்.டி ஸ்டாம்ப் போதைப் பொருளும், 3 கிராம் ஓ.ஜி. கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரெடிட் ஆன்லைன் செயலி மூலமாக போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியும், அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கார்த்திகேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அரவிந்த் பாலாஜி (20), கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வத்சல் (21), மறைமலை நகரை சேர்ந்த திரிசண் சம்பத் (20), ஆருணி (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கார்த்திகேயனிடம் ஜெ.ஜெ. நகர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கும் இவருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஜெ.ஜெ.நகர் போலீசார், அலிகான் துக்ளக்கை டிசம்பர் 4 ஆம் தேதி கைது செய்தனர்.
அலிகான் துக்ளக்கின் ஜாமீன் கோரிய மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி துக்ளக் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இந்த மனு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தன்னிடம் இருந்து எந்த போதைப்பொருளும் போலீசார் பறிமுதல் செய்யாத நிலையில் தன்னை கைது செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, இந்த மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 30 ஆம் தேதிக்கு, அதாவது இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. போதைப்பொருள் தொடர்பான வழக்கு விசாரணை நிலையில் இருப்பதால் ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
காவல்துறையின் வாதத்தை ஏற்று ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டுள்ளார். கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்ட துக்ளக் அலிகான், கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிறையில் இருந்து வருகிறார். தனது மகன் சிறைக்கு செல்லும் முன், நீதிமன்ற வளாகத்தில் நின்றுக்கொண்டிருந்த மன்சூர் அலிகான் வேன் அருகில் காவல்துறை வாகனம் அருகில் சென்று மகனுக்கு புத்திமதி கூறி இருந்தார்.
"கஞ்சா எல்லாம் அடிக்கக் கூடாது. ஜெயிலில் நிறைய புத்தகங்கள் படி. தெம்பா, தைரியமாக இரு.. ஏன் தப்பு பண்ற, கஞ்சா குடிச்சா கவர்மெண்ட் அரெஸ்ட் பண்ணும் தெரியாதா?" என்று பேசினார். மேலும், கல்லூரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் போதைப்பொருள் எப்படி கிடைக்கிறது. டாஸ்மாக்கை ஒழியுங்கள் என வேண்டுகோள் வைத்தார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications