Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்கள் மனங்களில் இடம்பிடித்த மாரிமுத்துவின் மரணம் அதிர்ச்சி.. அமைச்சர் சக்கரபாணி இரங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாரிமுத்து அவர்களது மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. மக்கள் மனங்களில் இடம்பிடித்த அவரது மறைவு கலையுலகிற்கு பேரிழப்பு என்று அமைச்சர் சக்கரபாணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 56. நடிகராக மட்டுமல்லாது இயக்குநராகவும் திரைப்படங்களை இயற்றியுள்ளார். இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

Actor Marimuthus death is a shock Minister Sakkrapani condoles

பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் , விமல் நடித்த புலிவால் ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். 50க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியன் 2 படத்திலும் நடித்துள்ளார் மாரிமுத்து.

எதிர்நீச்சல் டிவி சீரியல் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. இன்றைய தினம் காலையில் சீரியலுக்கு டப்பிங் பேசிய போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். நடிகர் மாரிமுத்து மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் மாரிமுத்துவின் மரணத்தால் துயரமடைந்துள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Actor Marimuthus death is a shock Minister Sakkrapani condoles

இந்நிலையில் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தனது சமூகவலைத்தள பக்கத்தில், இயக்குநரும், நடிகருமான திரு. மாரிமுத்து அவர்களது மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அளிக்கிறது. மக்கள் மனங்களில் இடம்பிடித்த அவரது மறைவு கலையுலகிற்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+