பிரதமருக்கு கண்டனம்.. முதல்வருக்கு வரவேற்பு.. திருமணத்தில் மயில்சாமி கொடுத்த வித்தியாசமான பரிசு
புதுமண தம்பதிக்கு வித்தியாசமான பரிசு பொருட்களை வழங்கிய மயில்சாமி
சென்னை: நடிகர் மயில்சாமி ஒரு திருமணத்தில் வித்தியாசமான திருமண பரிசை கொடுத்ததால் அந்த அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.
நடிகர் மயில்சாமி 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து காமெடிகளில் கலக்கியவர். அவர் வடிவேலு, விவேக் உள்ளிட்ட காமெடியன்களுடன் நடித்திருந்தார். மிமிக்ரி கலையிலும் வல்லவர். விவாதங்களிலும் பங்கேற்பது வழக்கம்.
இவருக்கு சமூகம் சார்ந்த அக்கறை இருக்கிறது. அது குறித்து நிறைய இடங்களில் குரல் கொடுத்துள்ளார். இவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பேசி வந்தார். தனது தொகுதி மக்களுக்கு நன்மை செய்ய அவர் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார்.

எத்தனை வாக்குகள்
அந்த தேர்தலில் 1440 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த தொகுதியில்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சினேகனும் போட்டியிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருந்தது. அப்போது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு மயில்சாமி சென்றிருந்தார்.

பெட்ரோல் கேனுடன்
அங்கு மணமக்களுக்கு பெட்ரோலுடன் கூடிய கேனை பரிசளித்தார். இதை பார்த்த அங்கிருந்த மக்கள் குபீரென சிரித்து விட்டனர். பெட்ரோல் விலை ஏற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து தான் அவர் இவ்வாறு செய்துள்ளார் என்பதை அனைவருமே புரிந்து கொண்டனர். இதுகுறித்து அவரிடம் கேட்ட போது பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை.

சிரமங்கள்
மக்கள் படும் சிரமங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் விலை உயர்வு குறித்தும் யாரும் நினைத்து பார்ப்பதே இல்லை. அப்படிப்பட்ட மத்திய அரசுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காகதான் இப்படி செய்தேன். அதே நேரம் தமிழக அரசு பெட்ரோல் விலையை ரூ 3 குறைத்ததை வரவேற்கிறேன் என மயில்சாமி தெரிவித்திருந்தார். மயில்சாமியின் இந்த வித்தியாசமான பரிசளிப்பு இணையங்களை கலக்கியது. இவரை பார்த்து நிறைய பொதுமக்கள் புதுமணத் தம்பதிகளுக்கு பெட்ரோல் கேனை வழங்கியிருந்தனர்.

எத்தனை மணிக்கு போன் செய்தாலும்
அது போல் ஒரு சினிமா விழாவில் பேசியிருந்த அவர் சிலர் எவ்வளவு விலை உயர்ந்த போனை வைத்திருந்தாலும் போன் செய்தால் எடுப்பதே இல்லை. ஆனால் என்னை யார் எத்தனை மணிக்கு அழைத்தாலும் அவர்களுக்கு நான் பதில் அளிப்பேன். ஆனால் ஒரு நாள் நைட் 2 மணிக்கு ஒருவர் எனக்கு போன் செய்து எந்த நடிகையை.. எந்த நடிகர் வெச்சி இருக்கானு கேட்டார்... யார் யாரை வெச்சி இருந்த எனக்கு என்ன.. நைட் 2 மணிக்கு கேட்கும் கேள்வியா இது, என்ன பார்த்து ஏன் கேட்டானு யோசித்து என் தூக்கமே போச்சு இதனால், நைட் நான் போனை ஆன் செய்து வைப்பதே இல்லை என்று கலகலப்பாக பேசினார் மயில்சாமி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications