2 நாளா இறுக்கம்! மனதுக்குள்ளயே தேங்கிய சோகம்! ஒரு போர்ட்டை பார்த்ததுமே வெடித்து அழுத மயில்சாமி மகன்
அப்பாவை நினைத்து மயானத்தில் கதறி அழுத மயில்சாமி மகன்
சென்னை: இரு நாட்களாக மனம் முழுக்க கவலையுடன் உள்ளுக்குள்ளேயே கண்ணீர் வடித்த மயில்சாமியின் மகன் இன்றைய தினம் அவரது இறுதி ஊர்வலத்தின் போது ஒரு போர்ட்டை பார்த்து வெடித்து அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.
நடிகர் மயில்சாமி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர். சிறு வயது முதலே வறுமையில் இருந்த அவர் பிழைப்பு தேடி சென்னை வந்தார். அங்கு அவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. இதற்காக அவர் மிமிக்ரி கற்று தேர்ந்தார்.
பலகுரல் வித்தகரான மயில்சாமிக்கு 1984 ஆம் ஆண்டு தாவணி கனவுகள் படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. சிறிய வாய்ப்புதான் என்றாலும் பின்னாளில் காமெடி ஜாம்பவானாக உருவாக வழிவகுத்தது.

வடிவேல்
வடிவேல், விவேக் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர், இவருக்கு பிடித்தவர்கள் என்றால் எம்ஜிஆரும் சிவபெருமானும்தான். இருவருக்காக அப்படி உருகுவாராம். நண்பர்களை சந்தித்தாலும் யாரை சந்தித்தாலும் எங்கு சுற்றினாலும் அவரது பேச்சு சிவனை பற்றியும் எம்ஜிஆரை பற்றியதாகத்தான் இருக்குமாம்.

மயில்சாமி
அந்தளவுக்கு அவர்கள் மீது மயில்சாமிக்கு தீராத பற்று. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பலரை அழைத்து சென்று ஆன்மீகத்தை அவர்களுக்குள் ஆழமாக விதைத்துள்ளார். அத்துடன் தான் சம்பாதிக்கும் பணத்தில் 100 சதவீதத்தையும் இல்லாதோருக்கே கொடுத்துவிடுவாராம். அது போல் கொரோனா, புயல், வெள்ளம், மழை காலங்களில் எங்கிருக்கும் ஏழை மக்கள் வயிறார சாப்பிட்டார்களோ இல்லையோ ஆனால் மயில்சாமியின் விருகம்பாக்கம் வீடு உள்ள தொகுதி மக்கள் நிச்சயம் சாப்பிட்டிருப்பார்கள் என சொல்லும் அளவுக்கு அவரது தயாள குணம் இருந்துள்ளது.

சிவராத்திரியை முன்னிட்டு
இவர் நேற்று முன் தினம் சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் போரூர் ராமசந்திராவில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு ஏற்கெனவே இரு முறை பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.

மயில்சாமி
இந்த நிலையில் மயில்சாமியின் உடல் நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று முதல் தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருவோரிடம் கதறினாலும் தனது தாய் கலங்கக் கூடாது என்பதற்காக துக்கத்தை இரு மகன்களும் அப்படியே தேக்கி வைத்தபடியே முகத்தில் அத்தனை சோகத்துடனும் மனதில் கண்ணீருடனும் நின்றனர். அவர்கள் அகத்தில் அழும் காட்சிகள் முகத்தில் நன்றாக தெரிந்தது.

தாய்க்காக அமைதி
செலிபிரட்டிகள் அழுதாலும் லேசாக உடைந்தார்களே தவிர தனது தாய்க்காக அமைதி காத்தனர். மனதளவில் வலிமையாக இருந்தனர். ஆனால் உள்ளுக்குள்ளேயே புழுங்கினர். இந்த நிலையில் மயில்சமியின் உடல் இன்று வடபழனி ஏவிஎம் மின் மயானத்தில் தகனம் செய்ய ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவரை கிடத்தி வைத்திருந்த வாகனத்தில் மயில்சாமியின் மூத்த மகன், எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

இளைய மகன்
அது போல் தந்தைக்கு கொள்ளி போட இளைய மகன் ஊர்வலகமாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் தந்தையை கிடத்தி செல்லும் வாகனத்தில் எல்இடி விளக்குகளால் தெய்வத்திரு மயில்சாமி என எழுதப்பட்டிருந்ததை கண்டு மயில்சாமியின் மகன் சாலையிலேயே கதறி அழுதார். அவரை உடனிருந்தவர்கள் தேற்றினர். அது போல் மயானத்தில் தனது தந்தையை சுற்றி வந்த போதும் தனது அண்ணனையும் நண்பர் ஒருவரையும் கட்டி அணைத்து அழுதார். தனது தந்தையை மின் மயானத்தில் வைத்தவுடன் இரு மகன்களும் வைத்த கண் வாங்காமல் பார்த்து கதறிய காட்சி காண்போரை கலங்கச் செய்தது. இரு நாட்களாக தேக்கி வைத்து மனதிற்குள்ளேயே வைத்திருந்த துக்கத்தை மயானத்திலும் சாலையிலும் இரு மகன்களும் வெடித்து சிதறடித்துவிட்டனர். தந்தைதானே மகன்களுக்கு ஹீரோ, இன்று அந்த தந்தையே இல்லை என்றால்!
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications