வாரிசு நடிகை டான்ஸ் ஆடியபோது மோகன்லால் ஆபாச சைகை செய்யவில்லை! கட்டிங் ஒட்டிங் நடந்ததா? உண்மை என்ன?
சென்னை: ஒரு விருது வழங்கும் விழாவில் மூத்த நடிகரின் மகள் (நடிகையும்தான்) நடனமாடிய போது நடிகர் மோகன் லால் ஆபாசமான சைகையை செய்தாரா என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: மலையாள சினிமா உலகம் தன் எதிர்காலத்தை நினைத்து கவலை கொண்டிருக்கிறது. இந்த வருடம் தொடக்கம் அசத்தலான வெற்றிகளோடு துவங்கியது, யார் கண் பட்டதோ இன்று ரசிகர்களிடம் கேவலமான பார்வைக்கு சென்று விட்டது.

நடிகர்கள், பட அதிபர்கள் தொடக்க காலம் முதலே இந்த செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது எல்லோரும் அறிந்த கதை. லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு படித்தாலே நமக்கு புரியும். இது காலகாலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயமே. சினிமாத்துறை என்பது அதீத புகழையும், பணத்தையும் தருவதால் இதற்கு ஆசைப்பட்டு பலர் வருகின்றனர். அதை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
மலையாள திரையுலகம் மிகச் சிறிய திரையுலகம். அங்கு படமெடுக்க மிகக்குறைந்த பணம் போதுமானது. அதனால் சினிமா ஆசையும், பெண்ணாசையும் உள்ள சாமானியர்கள் கூட மலையாளத்தில் படம் தயாரிப்பார்கள். உலகம் முழுக்க தொழில் செய்து வரும் மலையாளிகளுக்கு அடுத்து வரும் ஆசை சினிமா எடுப்பது.
தமிழ்நாட்டில் ஃபைனான்சியராக இருந்த திருப்பதி செட்டியார் மலையாளத்தில் தயாரிப்பாளர். இந்த சாமானியர்கள் படமெடுக்க நுழைந்ததும் ஆசைப்படுவது நடிகைகளை தான். அவார்ட் படம், கமர்ஷியல் படம் அல்லாது ஸாஃப்ட் போர்ன் படங்கள் என்கிற யுக்தியை முதலில் கண்டுபிடித்ததும் அவ்வுலகம் தான்.
ஸாஃப்ட் போர்ன் படங்களில் பெரிய நடிகர்களே தொடக்கத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நடிகர்களை உச்சத்தில் வைப்பது ரசிகர்களே...
மோகன்லால் 83, 84 காலகட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக ஒரே நாளில் உயர்ந்த போது பெண் ரசிகைகள் தான் அதிகம். அப்போது ஒரு விழாவில் பேசிய அன்றைய மந்திரி "பெண்கள் தங்கள் கணவர்களோடு உறவில் ஈடுபடும் போது கண்மூடி லாலை நினைத்துக் கொள்கின்றனர்.." என ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டார். அது பெரிய சர்ச்சையாக அன்று வெடித்தது. அப்படி மோகன்லால் என்கிற நடிகரை உச்சத்தில் வைத்துப் பார்த்த மலையாளிகளில் பலர் இன்று திட்டி தீர்க்கின்றனர்.
இங்கு கூட சாந்தி வில்லியம்ஸ் என்கிற நடிகை, மூத்த நடிகரின் மகள், மேடையில் ஆடும் போது மோசமான சைகை செய்தார் என விளாசி இருந்தார். உண்மையில் அந்த வாரிசு நடிகை ஆடும் ஸைமா விருது நிகழ்ச்சி வேறு. மோகன்லால், மம்முட்டி, சித்திக் போன்றோர் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சியில் மோகன்லால் சைகை செய்யும் நிகழ்ச்சி வேறு.
இரண்டையும் இணைத்த அந்த எடிட்டர் தான் தண்டிக்கப்பட வேண்டியவன். மோகன்லால் பொது இடத்தில் அப்படி செய்ததும் தவறு தான். அதுவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நடிகர் சித்திக் முதல் மனைவி தற்கொலை செய்து கொண்டபோது சாந்தி கிருஷ்ணா விஷயம் தான் அப்போது பேசப்பட்டது. கேரள நடிகை லிஸியின் அம்மா நடத்திய கொச்சி விடுதி பற்றி மலையாளப் பத்திரிக்கையில் போலீஸ் கைதோடு செய்தி வந்ததுண்டு.
இந்த முகநூல் எழுத்தாளர்களில் சிலர் "தமிழனுக்கே இப்படித்தான் காதலிக்க கற்றுக் கொடுத்தார் இவர். இவர் வந்த பிறகு தான் எப்படி காதலிக்க வேண்டும் எனத் தெரியும்" என்றெல்லாம் எழுதியவருண்டு. ஒரு பெரிய நடிகரின் மகள் படித்த டாக்டர் சொல்லும் போது "என் தந்தையை தேடித்தான் எல்லா நடிகைகளும் ஆசைப்பட்டு வருவார்கள்..." என பேசுகிறார். வேறொரு சுட்டான் சுட்டேன் நடிகரின் மகன் ஒரு மேடையில் "என் தந்தைக்கு எத்தனை குடும்பம்னே தெரியவில்லை..." என தந்தையின் புகழை மெச்சிப் பேசுகிறார்.
தன் தந்தைகள் செய்தது இமாலய தவறு என்று கூட யோசிக்காமல் அந்த நடிகர்களை இவ்விஷயத்தில் குளோரிஃபை செய்வதெல்லாம் எத்தனை பைத்தியக்காரத்தனம். வேறொரு குட்டி நடிகை இருக்கிறார். எது நடந்தாலும் எல்லாமே தன் கண் முன்னால் நடந்தது போல் தன்னை சேர்த்துக் கொள்வார். 'எனக்கு பத்துவயது இருக்கும் போதே நடந்தது" என ஒரு யூடியூப் டைட்டிலைப் பார்த்ததும் குமட்டியது.
ஜெயித்த நடிகைகள் வாய் திறப்பதில்லை. தோற்ற நடிகைகள் புகார் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இடையில் விளம்பரப் பிரியர்கள் விளம்பரம் தேடுகின்றனர்... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications