பெற்றோரை ஒரு முறையாவது நடிகர் நாசர் வந்து பார்க்க வேண்டும்... சகோதரர்கள் வேண்டுகோள்
சென்னை: நடிகர் நாசர், அவரது தாயை வந்து பார்த்து, கவனித்துக் கொள்ளாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அவரது சகோதரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 25 வருடங்களாக நாசரின் பெற்றோர்கள் செங்கல்பட்டில் வசித்து வருகிறார்கள். வறுமையில் வாடும் அவர்களுக்கு என் சகோதரர் நாசர் எந்த உதவியும் செய்வதில்லை. அவர்களை பார்க்க கூட வருவதில்லை.
இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்தும் எந்த பலமும் இல்லை என அவரது சகோதரர் ஜவஹர், சில வாரங்களுக்கு முன்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், கூறியிருந்தார்.

மனைவி அனுமதிப்பதில்லை
மேலும், பெற்றோரை நேரில் அழைத்து வந்து கண்ணீருடன் பேசிய ஜவஹர், நாசர் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார். இதற்கு காரணம் அவரது மனைவி கமீலா தான். நாசருக்கு திருமணம் ஆனதிலிருந்து நாங்கள் அவரைச் சந்திக்கக்கூட அவரது மனைவி அனுமதிப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார்.

அரசியல் வித்தகர்கள்
இதற்கு பதிலளித்த நடிகர் நாசர், சமீபகாலமாக என் குடும்பம்சார் பிரச்சினைகள் எல்லா ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமிலா நாசருக்கு "ஓட்டுப் போட்டுவிடாதீர்கள்" என்ற ஒரு செய்தி கடத்தவே ஒரு குடும்பத்தை வீதிக்கு இழுப்பது கேவலம் என்று கருதுகிறேன். இதற்கு பின்னால் ஆதாயம் பெறும் அரசியல் வித்தகர்கள் பின் நின்று ஆட்டுவிக்கிறார்கள் என்று நான் எண்ணுவது இயற்கையானது என அறிக்கை வெளியிட்டார்.

பார்க்க வேண்டும்
இந்தநிலையில், நடிகர் நாசரின் சகோதரர்கள் அயூப்பும், ஜவஹரும் சென்னையில் இன்று கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, சகோதரர் நாசர், தமது தாயை வந்து நேரில் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக குற்றம்சாட்டினர். உடல்நலக் குறைவுடன் இருக்கும் தாயார், நாசரை ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்று விரும்புவதாக அவர்கள் கூறினர்.

சட்ட ரீதியான நடவடிக்கை
திருமணத்திற்கு முன், இருப்பதற்கு வீடு கூட இல்லாமல் இருந்த அண்ணி கமீலாவுக்கு, நாசரை திருமணம் செய்துகொண்ட பிறகே அடையாளம் கிடைத்ததாக அவர்கள் கூறினர். கமீலா, தங்களை யாரென்று கேட்பதாகவும், தாங்கள் நாசரின் சகோதரர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். பணம் தங்களுக்கு முக்கியமில்லை என்றும், நாசர், அவரது அம்மாவை வந்து பார்த்து கவனித்துக் கொள்ளாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications