Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெப்போலியனின் மூஞ்சியில அடிச்சது போல பேசிய விஜய்.. இப்ப புஸ்ஸி ஆனந்தை வேற காணோம்: பிரபலம் பொளேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் 41 பேர் இறந்துட்டாங்க.. 3 நாள் கழித்து வீடியோ போடும்போது, அது இரங்கல் வீடியோவகத்தான் இருக்க வேண்டுமே தவிர, முதலமைச்சருக்கு சேலஞ்ச் செய்யக்கூடிய வீடியோவாக இருக்கக்கூடாது.. விஜய்க்கு பக்குவமும் இல்லை.. முதிர்ச்சியான நபர்களையும் தன்னுடன் வைத்துக்கொள்ளவில்லை என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கருத்து கூறியிருக்கிறார்.

Jeeva Cinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, "பெரிய நடிகர்களுக்கு பல பேருக்கு ஆட்டிடியூட் இருக்கத்தான் செய்யும்.. இதில் விதிவிலக்கு என்றால் ரஜினிகாந்த்தை சொல்லலாம்.. எப்போதுமே பணிவானவர்.. எல்லாருடனும் பேசக்கூடியவர்.

பழைய இயக்குனர், பழைய தயாரிப்பாளரிடம் பேசக்கூடியவர்.. யாரையுமே இன்சல்ட் செய்ய மாட்டார்.. யார் சந்திக்க வந்தாலும், அவர்களை வரவேற்று பேசக்கூடியவர்..

ஆனால் மற்றவர்கள் ஓரளவுக்கு ஆட்டிடியூட் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.. அதிலும் ஒரு படம் ஹிட்டாகிவிட்டாலே, அவர்களை கையிலேயே பிடிக்க முடிவதில்லை.. உதாரணத்துக்கு கவின் போன்ற சின்ன சின்ன ஹீரோக்களை உதாரணமாக சொல்லலாம்.. 2 படம் ஓடினாலே பவுன்சர்களை வைத்து கொள்கிறார்கள்.. கவின் ரோட்டில் போனால், அவரை யார் என்ன செய்துவிட போறாங்க?

கவின் ஆட்டிடியூட்

கவின் நிறைய ஆட்டிடியூட் செய்யக்கூடியவர்.. அவரது ஒரு படத்தில் 2வது மாடியில் ஷூட்டிங் நடந்தது.. ஆனால், 2வது மாடிக்கான லிப்ட் வேலை செய்யவில்லை.. உடனே படிக்கட்டில் ஏறிச்செல்லாமல், லிப்ட் ரெடியானதும் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு, கேரவனில் போய் உட்கார்ந்து கொண்டார்.. இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலை? இது இன்றுள்ள பெரும்பாலான நடிகர்களுக்கும் உள்ளது..

விஜய் ஒரு டாப் ஹீரோ.. அன்று பிரபுதேவா டைரக்‌ஷனில் போக்கிரி படத்தில் விஜய் நடித்து கொண்டிருந்தார்.. அப்போது நெப்போலியன் மூத்த நடிகர் மட்டுமல்ல, மத்திய அமைச்சர் பதவியையும் வகித்தவர்.. விஜய்யின் போக்கிரி படத்தில் நெப்போலியனும் ஒரு போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார்..

ஷூட்டிங் ஸ்பாட்அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நெப்போலியனை பார்ப்பதற்காக அவரது நண்பர்கள் 20 பேர் சென்றிருக்கிறார்கள்.. அவர்கள் அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தபோது, விஜய் சாரை பார்க்க முடியுமா? என்று நெப்போலியனிடம் கேட்டுள்ளார்கள்..

'அதனாலென்ன? அவர் நம்ம தம்பிதான்.. தாராளமா பார்க்கலாம்' என்று சொல்லிவிட்டு, அனைவரையும் விஜய் தங்கியிருந்த கேரவனுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.. அப்போது கேரவனுக்கு வெளியில் ஒரு செக்யூரிட்டி இருந்துள்ளார்..

நெப்போலியன் நேராக சென்று கேரவனின் கதவை திறக்க முயன்றுள்ளார். அதற்குள் அந்த செக்யூரிட்டி, நெப்போலியனை தடுத்து, "உள்ளே விட முடியாது சார், யாரையும் உள்ளே விடக்கூடாதுன்னு சார் இன்ஸ்ட்ரக்‌ஷன் தந்திருக்காரு.. கேரவனுக்குள்ளே ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார்" என்று சொல்லி உள்ளார்.

கேரவன் படிக்கட்டில் விஜய்

இப்படி சொல்லும்போது இயல்பாகவே யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஈகோவும் வரும் கோபமும் வரும். உடனே நெப்போலியன் அந்த செக்யூரிட்டியிடம், "நான் யாருன்னு தெரியாதா உனக்கு? மத்தவங்க கிட்ட சொல்ற மாதிரியே என்கிட்டயும் சொல்றே? நான் வந்திருப்பதாக விஜய்யிடம் சொல்" என்று நெப்போலியன் சொல்லியவாறே கேரவன் கதவை திறக்க போயிருக்கிறார்.. அதற்குள் கேரவன் கதவு திறந்து, விஜய்யே படிக்கட்டில் வந்து நின்றுள்ளார்.

அப்போது நெப்போலியன் விஜய்யிடம், "தம்பி இந்த செக்யூரிட்டி என்னை உள்ளே விடமாட்டேங்குறாரு.. நான் யாருன்னு சொல்லு தம்பி" என்று கூறியிருக்கிறார்.

அதற்கு விஜய், "உங்களுக்கு அறிவு இருக்கா? இது என்ன மாதிரியான மேனரிசம் இது? நான் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கிற நேரத்துல, நீங்க பார்க்கணும்னு நினைச்சா நான் பார்க்கணுமா? என்னை ஏன் நீங்க பார்க்கணும்? என்கிட்ட நீங்க அப்பாயிண்மென்ட் வாங்கியிருக்கீங்களா?" என்று விஜய் கோபமாக கேட்டுள்ளார்..

யாருக்கு யார் தம்பி

உடனே நெப்போலியன், "இல்லை தம்பி நண்பர்கள் வந்திருக்காங்க, உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க" என்றாராம்..

அதற்கு விஜய், "யாருக்கு யார் சார் தம்பி? அப்பாயிண்ட்மென்ட் இல்லாமல் ஏன் வந்தீங்க? நான்தான் யாரையும் உள்ளே விடக்கூடாதுன்னு சொல்லி, ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன்.. இங்கே வந்து காட்டுக்கத்தல் கத்தறீங்க? மேனர்ஸ் தெரியாதா? என்று கேட்டுள்ளார்.. இனிமேல் என்னை பார்க்க வரணும்னா, அப்பாயிண்ட்மென்ட் வாங்கிட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு, படாரென கதவை மூடிவிட்டு உள்ளே சென்றுவிட்டாராம்..

தன்னுடன் 20 பேரை நம்பிக்கையுடன் அழைத்து சென்ற நெப்போலியனுக்கு பயங்கரமான அவமானம், அசிங்கமாக இருந்துள்ளது.. இதை பார்த்த 20 பேருக்கும் தர்மசங்கடமாக போய்விட்டது.

நெப்போலியன் அவமானம்

இப்படியொரு அவமானத்தை நெப்போலியன் சந்தித்ததில்லை என்பதால், அந்த நேரத்தில் படபடப்பாக வந்துள்ளது.. அங்கேயே அதிர்ச்சியில் நகராமல் நின்றிருந்தாராம்.. உடனே நண்பர்கள் அவரை தேற்றி, "பரவாயில்லை வாங்க சார்" என்று அவரை அழைத்து சென்றுள்ளார்..ஆனால், இதை எங்குமே நெப்போலியன் சொல்லவில்லை..

ஏதோ ஒரு பேட்டியில்., "ஏன் நீங்கள் விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதில்லை" என்று ஒரு நிருபர் கேட்கவும், படபடவென இந்த விஷயத்தை நெப்போலியன் சொல்லிவிட்டார்.. அதுமட்டுமல்ல, அப்போதிருந்து விஜய்யின் படத்தையும் பார்ப்பதில்லை என்றார் நெப்போலியன்.

புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார்

இப்போது கரூர் சம்பவத்துக்கு பிறகு, விஜய் தன்னுடன் ஓடி ஒளியற புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், போன்றோரைதான் வைத்துள்ளார்..ஓடி ஒளியக்கூடிய இவர்கள் எல்லாம் எப்படி கட்சியில் பொறுப்பில் இருக்க முடியும்? அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று விஜய்க்கு தெரியாதா? "சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளலாம், உடனடியாக சரணடையுங்கள்" என்றுதானே சொல்லியிருக்க வேண்டும்? என்றெல்லாம் கூறியிருக்கிறார் பாலாஜி பிரபு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+