வந்தே பாரத்தில் கேவலமான சிக்கன்! ‘மென்மையாக’ கண்டித்த பார்த்திபன்! மக்கள் இப்போ ஹாப்பி அண்ணாச்சி!
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த நடிகர் பார்த்திபன் அங்கு வழங்கப்பட்ட உணவு தரம் இல்லை என புகார் அளித்திருந்தார். இதை அடுத்து இந்த விவகாரம் சமூக வலை தளங்களில் பேசுபொருளான நிலையில் இது தொடர்பாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்தனர். இந்நிலையில் தற்போது உணவின் தரம் கூடியிருப்பதாக நடிகர் பார்த்திபனுக்கு மக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் தற்போது பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. மேலும், மற்ற ரயில்களில் வழங்கப்படுவது போன்ற உணவே வழங்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு முதலாவதாக தண்ணீர் கேன், ஆங்கில - தமிழ் செய்தித்தாள்கள் வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து டீ, காபி, ஜூஸ் ஸ்னாக்ஸ் வகைகளும் கொடுக்கப்படுகிறது.
தொடர்ந்து சைவ அசைவ உணவுகளும் பயணிகளுக்கு கட்டணத்துடன் வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட 250 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை உணவுக்காக தனியே வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சென்னை சென்ட்ரலிலிருந்து கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட உணவு தரமற்றதாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், "முக்கியம் என்பது அவரவர் மனநிலை சார்ந்தது.சார் அதை comment செய்ததால் உடனே இப்பதிவு. 'வந்தே பாரத்'-தில் தந்தே உணவு தரமாக இல்லை . பயணிகளுக்கு பயனுள்ளதாக இல்லை. ஆரோக்ய கேடென சுற்றத்தார் முனுமுனுத்தார்கள். நான் complaint book-ஐ வாங்கி கிறுக்கல்கள் எழுதி கொடுத்தேன். நானதில் தொடர்ந்து செல்லாவிட்டாலும், செல்பவர்கள் பயன் பெறுதல் முக்கியமென" கம்ளைண்ட் புக்கில் எழுதிய புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அந்த புகாரில்,"உணவு பரிமாறியவர்கள் சிறப்பாக செய்தனர். ரயில் சுகாதாரமாக இருந்தது. ஆனால் இரவு 7.22 மணிக்கு வழங்கிய உணவு மற்றும் சிக்கன் படு மோசமாக இருந்தது. உணவுக்காக பெருந்தொகையை வாங்கி கொண்டு இப்படி பரிமாறுவது கண்டிக்கத்தக்கது. ஆரோக்கியம் அவசியம். நன்றி" என எழுதியுள்ளார். இதனையடுத்து பார்த்திபனின் புகாருக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து பார்த்திபனின் புகார் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. நடிகர் பார்த்திபன் பயணம் செய்த ரயிலில் இரவு உணவை வழங்கியது சேலம் ரயில்வே கோட்ட பகுதி என்பதால் சேலம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் சேலத்தைச் சேர்ந்த ரயில்வே கேட்டரிங் ஒப்பந்ததாரர் வழங்கிய உணவு தரமற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து உணவு தயாரிப்பு கூடத்திற்கு சென்ற சேலம் கோட்ட உதவி வணிக மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி சில குறைபாடுகளை கண்டறிந்தனர். தொடர்ந்து ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்ததோடு இனி பயணிகளுக்கு வழங்கும் உணவு தரமானதாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் தற்போது சேலம் மார்க்கத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் சிறப்பானதாக இருப்பதாகவும், கடந்த முறை வழங்கப்பட்டதை விட தற்போது உணவின் தரம் கூடி இருப்பதாகவும் பயணிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பார்த்திபன்,"'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்' என வெகுண்ட பாரதியை போல, ஒவ்வொரு மனிதனுமே சக மனிதனைப் பற்றி கவலை கொள்ளல் வேண்டும். அவ்வகையில் நானும் 'சோத்து கட்சி'என்று ஒரு படம் தொடங்கினேன். நின்றுவிட்டது .மீண்டும் தொடங்குவேன்.நான் கட்சி சார்பில்லாதவன்.ஆதாயம் கண்டதாக ஆதாரம் காட்டுங்கள் குற்றம் சாட்டும் குணவான்களே! எந்த தொழிலாளிக்கும் பாதிப்பு வராமல் இருக்க கவனமாக உணவு தரமில்லை என்றே தெரிவித்தேன் அதை கவனமாக பரிசீலித்து நடவடிக்கை மேற்கொண்ட DRM Salem அவர்களுக்கும் , தவறை உடனே திருத்திக் கொள்ளக் கூடிய சிறந்த நிர்வாகத்தை நடத்தும் மத்திய அரசுக்கும் இனி பயன் பெறப் போகும் பயணிகள் சார்பில் நன்றி!" என கூறியுள்ளார்.
-
ரயிலில் மிடில் பர்த்தில் எப்போது தூங்க வேண்டும் தெரியுமா? ரயில்வே விளக்கம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications