ஸ்லோ பாய்சன் கொடுத்த அண்ணன்.. செயலிழந்த சிறுநீரகம் .. செய்வினை செய்த குடும்பம்.. பொன்னம்பலம் பகீர்
தனக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய தனது அண்ணனே முயற்சித்ததாக நடிகர் பொன்னம்பலம் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை: தனது அண்ணனே தனக்கு விஷம் வைத்து கொலை செய்ய முயற்சித்ததாக வில்லன் நடிகர் பொன்னம்பலம் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரபு நடித்த கலியுகம் திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் பொன்னம்பலம். இந்த படத்தைத் தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், புது மனிதன் பரதன், செந்தூர பாண்டி, சந்திரலேகா, தாய்மாமன், கூலி, சிம்மராசி, முத்து, நாட்டாமை, பகவதி, தவசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பொன்னம்பலத்திற்கு திருப்பு முனையாக இருந்த படம் என்றால் அது நாட்டாமை படம்தான். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இவர் ரஜினி, கமல், விஜயகாந்த் , சரத்குமார் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

உடல்நலம் பாதிப்பு
அண்மையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வீடியோ வைரலானது. இதையடுத்து பலரிடம் உதவி கேட்டார். சரத்குமார், கமல், சிரஞ்சீவி, தனுஷ், அர்ஜுன், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பிரபுதேவா, இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் பொன்னம்பலத்திற்கு உதவினர். பொன்னம்பலத்தின் சொந்த அக்கா மகன் தனது கிட்னியை கொடுத்து சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு உதவினார். அவருக்கு சென்னையில் பிப்ரவரி 10 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தேறி வரும் பொன்னம்பலம்
இந்த நிலையில் தற்போது உடல் நலம் தேறி வருகிறார் பொன்னம்பலம். இந்த நிலையில் பொன்னம்பலத்தின் சிறுநீரக பிரச்சினைக்கு குடிப்பழக்கம்தான் காரணம் என பல்வேறு வதந்திகள் கிளம்பின. இதுகுறித்து பொன்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், குடிப்பழக்கம் மற்றும் போதை பொருள் பயன்படுத்தியதால் எனது சிறுநீரகம் பழுதடைந்ததாக பலர் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மை அது இல்லை.

4 மனைவிகள்
என் தந்தைக்கு நான்கு மனைவிகள், மூன்றாவது மனைவியின் மகன் என் மேலாளராக சில காலம் என்னிடம் பணிபுரிந்தார். நான் அவர் மீது அதிகம் நம்பிக்கை கொண்டேன். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் எனக்கு ஸ்லோ பாய்சனை உணவில் கலந்து கொடுத்தது தெரியவந்தது. நான் பெயர், புகழ், பணத்துடன் வாழ்கிறேன், ஆனால் தன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என அவருக்கு என் மீது பொறாமை. அதனால் அவர் அதைச் செய்தார்.

பால்கனி
அது போல் ஒரு முறை நான் பால்கனியில் நின்று கொண்டிருந்தேன். அப்போது நடுராத்திரியில் என்னுடைய சகோதரன் வீட்டின் பின்புறத்தில் ஒரு குழியைத் தோண்டி ஒரு பொம்மை, என்னுடைய லுங்கியின் சிறிய துண்டு போன்றவற்றை எல்லாம் வைத்து செய்வினை செய்தார். இதை கண்கூட பார்த்து அதிர்ந்த நான் அவர்களை கையும் களவுமாக பிடித்தேன்.

போலீஸுக்கு போவதாக மிரட்டிய பொன்னம்பலம்
முதலில் கேட்ட போது ஒன்றுமில்லை என்றார்கள். பிறகு போலீஸில் பிடித்து கொடுத்துவிடுவேன் என கூறியதும், உண்மையை கக்கினார்கள். உடனே துரத்தியடித்தேன். இப்படியெல்லாம் என்னை அழிக்க என் சகோதரரே இப்படியெல்லாம் செய்தார். ஸ்லோ பாய்சன் கொடுத்ததால்தான் எனக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டது. மற்றபடி நான் குடித்ததால் அல்ல.

அஜித் விசாரிக்கவில்லை
மேலும் உடல்நலம் மோசமடைந்த நான் கடவுளின் அருளால் இன்று நலமுடன் இருக்கிறேன். எனக்கு உதவி செய்த அனைத்து நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி என பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்தை என் உடன்பிறந்த சகோதரனாக நினைத்தேன். அதனால் போன் செய்து நலம் விசாரிப்பார் என நினைத்தேன். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என உருக்கமாக பொன்னம்பலம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications