சிவாஜி கணேசன் வீடு விவகாரம்: “அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது”.. கோர்ட்டில் சொன்ன நடிகர் பிரபு!
சென்னை: தனது சகோதரர் ராம்குமார் நிறைய பேரிடம் கடன் வாங்கியுள்ளார் என்றும், அவருக்கு நான் உதவ முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் பிரபு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் தொடர்பான வழக்கில் பிரபு தரப்பில் இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரித்தனர். இந்தப் படத்தின் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம், 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

இந்த கடன் ஒப்பந்தத்தின்போது ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திரும்பத் தருவதாக உறுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் தொகையை திருப்பித் தராத நிலையில், இந்த விவகாரத்தை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டிருந்தார். கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக 'ஜெகஜால கில்லாடி' படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்கும்படி 2024 ஆம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, அவரது மகனான நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தனது சகோதரர் ராம்குமார் மகன் துஷ்யந்த் தொடர்புடைய நிதி சிக்கலில் தனக்கு உரிமையுள்ள வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக நடிகர் பிரபு தமது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் பிரபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் சம்பந்தமே இல்லாமல் மூன்றாம் நபரான தனது இல்லத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அதனை நீக்க வேண்டுமெனவும் வாதிட்டார்.
தனது சகோதரர் ராம்குமார் பெற்ற மூன்று கோடி ரூபாய் கடனுக்காக மூன்றாம் நபரான தனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனது வாழ்நாளில் இதுவரை ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை. எனவே அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்த செய்ய வேண்டும் என நடிகர் பிரபு தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, "ராம்குமார் உங்களுடைய சகோதரர் தானே ? ஒன்றாக தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அந்த கடனை தற்போது நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாமே?" என யோசனை தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த பிரபு தரப்பு வழக்கறிஞர், "இது போன்று அவருக்கு உதவ முடியாது. நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார்" எனத் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications