இதற்கா பிரகாஷ் ராஜை தாக்குனாங்க? “நிலாவிலும் மலையாளி டீக்கடை”.. ட்வீட்டுக்கு நகைச்சுவையான விளக்கம்
சென்னை: நிலவில் டீ மாஸ்டர் இருப்பதைபோல் ட்விட்டரில் பதிவிட்ட கார்ட்டூன் படத்திற்காக பிரகாஷ் ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், தனது ட்வீட் தொடர்பாக அவர் விளக்கம் கொடுத்து உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சந்திரயான் 3 விண்கலம் நிலவின் புகைப்படங்களை அனுப்பிய நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் அது தொடர்பாக ஒரு ட்வீட் வெளியிட்டு இருந்தார். அதில், "பிரேக்கிங் நியூஸ் - விக்ரம் லேண்டர் நிலவில் இருந்து எடுத்து அனுப்பிய முதல் படம்" என்று குறிப்பிட்டு அவர் ஒரு கார்ட்டூன் படத்தை பதிவிட்டு இருந்தார்.

அந்த படத்தில் ஒருவர் தேநீர் ஆற்றும் கார்ட்டூன் இருந்தது. இதற்கு பலர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ட்விட்டரிலும் அவருக்கு எதிராக ஏராளமான மீம்ஸ்கள் பகிரப்பட்டன. இந்த நிலையில் காவல் நிலையத்தில் அவர் மீது புகாரளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. கடந்த 21 ஆம் தேதி இது தொடர்பாக ட்விட்டரில் விளக்கமளித்த பிரகாஷ் ராஜ்,
"வெறுப்பை மட்டுமே வெறுப்பு பார்க்கும். ஆர்ம்ஸ்டிராங் டைம்ஸின் ஜோக்கைதான் நான் சுட்டிக்காட்டினேன். நமது கேரளா தேநீர் வியாபாரியை கொண்டாடுகிறோம். டிரோல்களை எந்த தேநீர் வியாபாரி பார்த்தது. இதை உங்களால் புரிந்துகொள்ள இயலவில்லை என்றால், இந்த ஜோக் உங்களை பற்றியதாகும். வளருங்கள்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி சரித்திர சாதனை படைத்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் நேற்று பதிவிட்ட பிரகாஷ் ராஜ், "இந்தியாவுக்கும் மனித நேயத்துக்கும் பெருமைமிகு தருணம் இது. இஸ்ரோ, சந்திரயான் 3, விக்ரம் லேண்டர் மற்றும் இது வெற்றிபெற உதவிய அனைவருக்கும் நன்றி. இது பிரபஞ்சத்தின் மர்மங்களை அறிவியவும், கொண்டாடவும் உதவட்டும்." என தெரிவித்து இருந்தார்.
To all #DumbTrolls who have still not got the joke n asking what happened to our malayali #Chaiwaala .. he is very intelligent unlike you .. he has expanded his franchise to Mars n Jupiter .. coming soon on Pluto too .. catch him if you can 😂😂😂 #justasking pic.twitter.com/SuKAPnwl9F
— Prakash Raj (@prakashraaj) August 24, 2023
இந்த பதிவின் கமெண்டில் பலரும் அவரை விமர்சித்தார்கள். அவரது வாழ்த்தையும் கடுமையாக விமர்சித்து மீம்ஸ்களை வெளியிட்டனர். இந்த நிலையில் தற்போது தனது அந்த டீ மாஸ்டர் கார்ட்டூன் படம் தொடர்பாக ட்விட்டரில் அவர் விளக்கம் கொடுத்து உள்ளார்.
அதில், "எனது ஜோக்கை புரிந்துகொள்ளாமல், நமது மலையாளி சாய் வாலாவுக்கு என்ன ஆனது என கேட்கும் அனைத்து ஊமை ட்ரோல்களுக்கும்.. உங்களை போலன்றி அவர் பெரிய அறிவாளி. தனது கிளையை அவர் மார்ஸ், ஜூப்பிட்டரிலும் தொடங்குவார். விரைவில் புளூட்டோவிலும் தொடங்குவார். முடிந்தால் அவரை பிடியுங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications