ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டிய பிரசாந்த்! நம்பரை சரியாக பார்க்காமல் வேறு நபருக்கு ஃபைன் போட்ட போலீஸ்?
சென்னை: நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூ 2000 அபராதம் விதித்த நிலையில் அதற்கான செல்லானில் வேறொருவரின் வாகன எண் இடம் பெற்றுவிட்டதாகவும் அதை போலீஸார் ரத்து செய்துவிட்டு சரியான வாகன பதிவு எண்ணை குறிப்பிட்டதாகவும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
நடிகர் பிரசாந்தின் அந்தகன் திரைப்படம் ஆகஸ்ட் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷன் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பிரசாந்த் ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் இரு சக்கர வாகனத்தை ஓட்ட கற்றுக் கொண்ட அனுபவங்களை அந்த தொகுப்பாளினியிடம் பகிர்ந்து கொண்டார். பின்னாடி கேமராமேன் வீடியோ எடுத்துக் கொண்டே செல்ல, இவர்கள் இருவரும் பைக்கில் பாண்டி பஜாரில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அதில் இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணித்த காட்சிகளும் வைரலாகின. இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறையின் பார்வைக்கும் சென்றது. இதையடுத்து நடிகர் பிரசாந்த், தொகுப்பாளினி ஆகியோருக்கு ஹெல்மெட் அணியாமல் விதியை மீறியதற்காக சென்னை பெருநகர காவல் துறை ரூ 2000 அபராதம் விதித்துள்ளது.
இது தொடர்பான புகைப்படத்தை போக்குவரத்து காவல் துறை அதிகாரப்பூர்வ எக்ஸ்வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீஸார் அபராதம் விதித்த சல்லானில் அவர்கள் குறிப்பிட்டது வேறு ஒரு நபரின் வாகன எண்ணை!
இதுகுறித்து அந்த நபரே தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: பிரசாந்த் ஓட்டி வந்த பைக் எண் TN11BC9722. ஆனால் போக்குவரத்து போலீஸார் தவறுதலாக ஒரு எண்ணை மட்டும் மாற்றி 9722 என்பதற்கு பதிலாக 0722 என்ற எண்ணை குறிப்பிட்டுவிட்டீர்கள் என புகார் அளித்திருந்தார். இதையடுத்து அவரது கோரிக்கைக்கேற்ப தவறான வாகன எண் கொண்ட சல்லான் ரத்து செய்யப்பட்டு பிரசாந்த் ஓட்டிய வாகனத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்டு சல்லான் வழங்கப்பட்டுள்ளது.
ஓட்டி வந்த பிரசாந்த், தொகுப்பாளினிக்கு மட்டும் இல்லாமல் வாகனத்திற்கும் ரூ 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரசாந்த் 1990 களில் பல பெண்களின் கனவு நாயகனாக இருந்தார். கட்டிக்கிட்டால் பிரசாந்த் போல் இருப்பவரைத்தான் கட்டிக் கொள்ள வேண்டும் என பலர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் திரைத்துறையிலிருந்து சில காலம் விலகியே இருந்தார்.
இந்த நிலையிலஸ் தி கோட் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அது போல் அந்தகன் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன் பணியில் ஈடுபட்ட போதுதான் இப்படி ஒரு சம்பவங்கள் நடந்துள்ளன.
ஹெல்மெட் அணியாததால் அபராதம்.. நடிகர் பிரசாந்தின் முதல் ரியாக்சன் இதுதான்.. செம மெசேஜ்
இது குறித்து திருச்சியில் நேற்று பத்திரிகையாளர்களை பிரசாந்த் சந்தித்த போது கூறுகையில் கடந்த ஓராண்டாக ஹெல்மெட் விழிப்புணர்வுகளை நிறைய செய்துள்ளேன். தமிழகம் முழுவதும் இலவச ஹெல்மெட் கொடுத்துள்ளேன். நீங்களும் அதை செய்தியாக்கியுள்ளீர்கள்.

நாகர்கோவில், திருச்சி, மதுரை என்ற பல இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். ஹெல்மெட் அணிந்து கொண்டு பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள் என நான் தொடர்ந்து கூறி வருகிறேன். இந்த சம்பவத்தின் மூலம் எனக்கு இன்னொரு பிளாட்பார்ம் கிடைத்துள்ளது.
அனைவரும் ஹெல்மெட் அணிந்து கொண்டு வாகனங்களை ஓட்டுங்கள். இது எனக்கு மட்டுமில்லை, உங்களின் குடும்பத்திற்கும் முக்கியம். எங்காவது போக வேண்டுமா, ஒரு 5 நிமிடம் முன்னதாகவே புறப்பட்டு செல்லுங்கள். அவசர அவசரமாக செல்ல வேண்டாம். உங்களுக்கு ஏதாவது நடந்தால் அது உங்கள் குடும்பத்தினரை பாதிக்கும். தற்போது எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்ததால் ஹெல்மெட்டின் அவசியத்தை கூறியிருக்கிறேன் என பிரசாந்த் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications