Radha Ravi: ஒன்றா இரண்டா.. எத்தனை மட்ட ரக பேச்சுக்கள்.. ராதா ரவியை துரத்தம் சர்ச்சை
Recommended Video

சென்னை: நடிகர் ராதா ரவிக்கும் சர்ச்சை பேச்சுக்களுக்கும் முடிவே கிடையாது. 'அவள் ஒரு தொடர் கதை' என்ற தலைப்பு இவருக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்னும் அளவுக்கு சர்ச்சை நாயகனாகவே மாறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து திமுகவில் சேர்ந்தவர் நடிகர் ராதா ரவி. ஆனால், இன்னும் இவர் அதிமுக ஸ்லீப்பர் செல்தானோ என சந்தேகப்படும்படியாக சர்ச்சை பேச்சுக்களை அவிழ்த்துவிட்டு வருகிறார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோது, மாற்றுத்திறனாளி குழந்தைகளை மிகவும் புண்படுத்தும் விதத்தில் நடந்து கொண்டார்.

ராதாரவி மோசமான பேச்சு
ஊனம் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவிடாமல் மாற்று திறனாளிகள் என்று மாற்றி பயன்படுத்தும் இந்த நவீன யுகத்தில் ராதா ரவியின் பேச்சு பெரும், அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராதா ரவி, திமுகவினரை எதிர்க்கும் அரசியல்வாதிகளான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரை, சப்பாணி என கூறி அழைத்தார். மேலும், கைகளை கோணிக்கொண்டு, அந்த குழந்தைகள் படும்பாட்டை கிண்டல் செய்து காண்பித்தார். ராதா ரவியின் இந்த செயல்பாடு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார். மாற்றுத்திறனாளிகள் ஆதரவு அமைப்பு காவல் நிலையத்தில் ராதாரவிக்கு எதிராக புகார் அளித்தது.

சர்ச்சை தொடர்கதை
நாய் என்பதை நாய் என்றுதான் கூற முடியும். ஆங்கிலத்தில் டாக் என அழைத்தால் அது நல்ல வார்த்தையாகிவிடும். தமிழில் நாய் என்று அழைத்தால் அதற்காக தகராறு செய்வார்களா என்று அதற்கு மோசமாக ஒரு சப்பைகட்டும் கட்டினார், ராதாரவி. இந்த நிலையில், மீண்டும், மீண்டும், சர்ச்சையை நிறுத்தவில்லை அவர்.

மீ டூ சர்ச்சை
சென்னையில் நடந்த ‘அவதார வேட்டை' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ராதாரவி கலந்து கொண்டு பேசும் போது ‘மீ டூ' குறித்து கருத்து தெரிவித்து மோசமாக பேசினார். சினிமா துறையில் ‘மீ டூ' பற்றி பேசப்பட்டு வருகிறது. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஆனால் கூத்தாடி இரண்டுபட்டால் அது ஊருக்கே கொண்டாட்டம். எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை 4 நாட்கள்தான் பரபரப்பாக பேசினார்கள். அதுபோல் ‘மீ டூ' வும் சில நாட்களில் காணாமல் போய் விடும் என்று அலட்சியப்படுத்தினார்.

கோபமோ கோபம்
மற்றொரு நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினி, ராதா ரவி பேசுவார் என பெயர் சொல்லி அழைத்ததற்கு வந்ததே பார்க்கலாம் கோபம். எனது பெயரை சொல்லி கூப்பிடும் அளவுக்கு தகுதியுள்ளதா உனக்கு என சரமாரியாக பொரிந்து தள்ளிவிட்டார். பாவம் அந்த பெண். மேடையில் நெளிந்தார். மேலும் பெரும்பாலான மேடைகளில் அரசியல் தலைவர்களையும், கலைஞர்களையும், ஒருமையில் அழைத்து முகம் சுளிக்க வைப்பது ராதா ரவி வாடிக்கையாக இருந்து வருகிறது.

தொடர் கதை
இப்போது லேட்டஸ்ட்டாக, நயன்தாரா குறித்து மோசமான கருத்துக்களை கூறியுள்ளார். இதற்காக திமுகவிலிருந்து இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். எனவே ஒரு வழியாக நயன்தாராவிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், கூறியுள்ளார். எனவே ராதா ரவி அவ்வளவு எளிதில் தனது நாவிற்கு கடிவாளம் போட மாட்டார் என்றுதான் தெரிகிறது.
-
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
உதயநிதி ஸ்டாலினை மதிக்காத கேஎன் நேரு? எழுந்து நின்றும் கண்டுகொள்ளவில்லையே.. இருவருக்கும் சண்டையா? -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
முக்கிய அமைச்சராச்சே.. இவருக்கே இவ்வளவு டஃப்பா.. சிட்டிங் மினிஸ்டருக்கு சிக்கல்.. ஸ்டாலின் பிளானிங் -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
பிரேமலதா குடும்பத்திற்கு ஸ்டாலின் தரும் இன்னொரு சர்ப்ரைஸ்! பிரபாகரன் போட்டியிடும் தொகுதி -EXCLUSIVE -
“பைத்தியக்காரத்தனம்”.. திமுக சட்ட எரிப்பைக் கிண்டல் செய்த பெரியார்? கெடு விதித்த அண்ணா! -
எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு.. விஜய் எதுவும் கருத்து சொன்னாரா? மருத்துவர் ஷர்மிளா கேட்ட கேள்வி!












Click it and Unblock the Notifications