Actor Rajesh: கனடாவில் கதறி தவிக்கும் மகள் திவ்யா! எம்பார்மிங் செய்யப்படும் நடிகர் ராஜேஷின் உடல்!
சென்னை: மறைந்த நடிகர் ராஜேஷின் உடல் எம்பார்மிங் செய்வதற்காக சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருடைய மகள் கனடாவில் இருப்பதால் அதுவரை ராஜேஷின் உடலை பதப்படுத்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
150 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த நடிகர் ராஜேஷ் நேற்றைய தினம் திடீரென காலமானார். அவருக்கு வயது 75. ராஜேஷ் பன்முகத்திறமை கொண்டவர். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்.

இவர் பியூசி தேர்ச்சி பெறாவிட்டாலும் புரசைவாக்கத்தில் உள்ள செயின்ட் பால் உயர் நிலைப் பள்ளி, திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லட் உயர்நிலை பள்ளி ஆகியவற்றில் ஆசிரியராக பணியாற்றியிருந்தார்.
அப்போதுதான் அவருக்கு, "அவள் ஒரு தொடர்கதை" படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறு ரோல்தான். பின்னர் கன்னி பருவத்திலே படத்தில் வடிவுக்கரசியுடன் நடித்திருந்தார். இவருடைய நடிப்பு தனி ஸ்டைல் பெற்றிருக்கும்.
டப்பிங் கலைஞர்
அந்த கதாபாத்திரத்திலேயே ஊறி விடுவார். டப்பிங் கலைஞரும் கூட! இதனால் அவருடைய டயலாக் டெலிவரியும் சிறப்பாகவே இருக்கும். கல்லூரியில் படிக்காவிட்டாலும் இவர் மேதைதான்.
புத்தகங்கள்
இவரது அறையில் கிட்டதட்ட ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. தனது கல்வியை கற்றலில் இல்லாமல் வாசிப்பில் மேம்படுத்திக் கொண்டார். கே.கே. நகரில் ஷூட்டிங் நடத்துவதற்கான பங்களாவை கட்டிய முதல் தமிழ் நடிகரும் இவர் ஆவார். இவர் எம்ஜிஆருக்கு நெருக்கமானவராக இருந்தார்.
தமிழ், மலையாளம்
இந்த வீட்டில் தமிழ், மலையாளம், இந்தி படங்களின் படப்பிடிப்புகள் நடந்தன. பின்னர் அந்த வீட்டை 1993 ஆம் ஆண்டு விற்பனை செய்துவிட்டார். இதையடுத்து அவர் ஜேப்பியாரின் அறிவுரையின்பேரில் ரியல் எஸ்டேட் தொழிலை தொடங்கினார்.
கொடி கட்டி பறந்தார்
அதில் கொடிகட்டி பறந்தார். சினிமாவை காட்டிலும் அந்த தொழிலிலேயே நிறைய சம்பாதித்துவிட்டார். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜானகி அம்மாளின் ஆதரவு கிடைத்ததால் இவர் 1987 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை அரசியலிலும் இருந்தார்.
காரல் மார்க்ஸ்
இவர் காரல் மார்க்ஸின் தீவிர பற்றாளர். அவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்த பிரிட்டன் சென்றிருந்தார். கடைசியாக, "மெர்ரி கிறிஸ்துமஸ்" எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
மனைவி இறந்துவிட்டார்
அண்மைக்காலமாக இவர் ஆரோக்கியம் குறித்து மருத்துவர்களை பேட்டி எடுத்து வந்தார். இவரது மனைவி சில்வியா கடந்த 2012 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இந்த தம்பதிக்கு திவ்யா, தீபக் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடைசியாக ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டாராம்.
மகனுக்கு திருமணம்
தற்போது ஜூன் 6ஆம் தேதி ராஜேஷின் மகன் தீபக்கிற்கு திருமணம் நடைபெறுகிறது. இதற்காக ராஜேஷ் மும்முரமாக இருந்தாராம். சக நடிகர், நடிகைகளிடம் எல்லாம் தனது மகன் திருமணம் குறித்து தெரிவித்து வந்தாராம்.
துபாய் சென்ற ராஜேஷ்
இந்த நிலையில் அவர் துபாய் சென்றுவிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினாராம். வரும்போதே சளி பிடித்ததுடன்தான் வந்தாராம். இந்த நிலையில் அவருக்கு வழக்கம் போல் மருந்து மாத்திரைகளை கொடுத்த நிலையில் நேற்று அதிகாலை மூச்சுவிட சிரமப்பட்டுள்ளார்.
ராஜேஷ் இறப்பு
இதனால் உடனேயே அவரது மகன் தீபக், ராஜேஷை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸை வரவழைத்தார். அப்போது மாடியிலிருந்து கீழே இறங்கிய போதே அவருடைய ஆக்ஸிஜன் அளவு குறைந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸில் ஏற்றியதுமே அவரது உயிர் பிரிந்தது. ஆனாலும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
யார் அஞ்சலி?
இதையடுத்து நேற்றைய தினம் ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ராஜேஷின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், விசிக திருமாவளவன், பார்த்திபன், கே.ஆர்.விஜயா, வைரமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ராஜேஷுக்கு ஜூன் 1இல் இறுதி சடங்குகள்
இந்த நிலையில் ராஜேஷின் மகள் திவ்யா கனடாவில் வசித்து வருகிறாராம். அவர் வந்ததும் ஜூன் 1 ஆம் தேதி ராஜேஷுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்படுகின்றன. அது வரை ராஜேஷின் உடலை பாதுகாக்க (பதப்படுத்த) எம்பார்மிங் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி அவருடைய உடல் போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
எம்பார்மிங் (embalming) என்றால் என்ன?
எம்பார்மிங் என்றால் ஒரு உடலை கெடாமல் நல்ல நிலையில் வைத்திருப்பதற்காக சில ரசாயனங்களை கொண்டு பாதுகாப்பது ஆகும். பொதுவாக இறந்தவர்களின் முக்கிய உறவினர்களான மனைவி, கணவன், மகன், மகள், தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் வருகைக்காக உடலை பதப்படுத்துவது வழக்கமான ஒன்று.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications