Actor Rajesh: நடிகர் ராஜேஷ் இப்படித்தான் இறக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட கமல்! நிறைவேற்றியது விதி!
சென்னை: நடிகர் கமலை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை ராஜேஷுக்கு நிறைவேற்றாவிட்டாலும் ராஜேஷ் எப்படி இறக்க வேண்டும் என கமல் ஆசைப்பட்டது இன்று நிறைவேறியிருக்கிறது.
நடிகர் ராஜேஷை பார்க்கும் போது சினிமா நடிகர் போல் இல்லாமல் எளிமையாக நம் பக்கத்து வீட்டு நபர் போல் இருப்பார். ஆனால் கேமரா முன்பு வந்துவிட்டால் எங்கிருந்துதான் அந்த ஆத்மார்த்தமான நடிப்பு வருமோ தெரியாது!

அந்த அளவுக்கு அவர் திரைத்துறைக்கு பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் வட்டத்தை சேர்த்தவர். ராஜேஷுக்கு குடிப்பதோ, புகைப்பிடிப்பதோ, பெண் சகவாசமோ எதுவும் இல்லை. இதை அவரே சொல்லியிருக்கிறார்.
150-க்கும் படங்கள்
150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவர் மீது இதுவரை எந்த கிசுகிசுக்களும் வந்ததில்லை. பியுசி தேர்ச்சி பெறவில்லை. ஆனாலும் ஏராளமான புத்தகங்களை படித்திருக்கிறார். படித்தவர்களை காட்டிலும் அத்தனை ஞானம் அவருக்கு இருக்கிறது.
டும் டும் டும்
"டும் டும் டும்", "மஜா", "உள்ளம் கேட்குமே" இவர் முரளிக்காக பின்னணி குரல் கொடுத்துள்ளார். "பொய் சொல்ல போறோம்" என்ற படத்தில் நெடுமுடி வேணுவுக்கு ராஜேஷ் குரல் கொடுத்திருந்தார். ராஜேஷ் 9 புத்தகங்களை எழுதியுள்ளார்.
இந்திரா காந்தி
இந்திரா காந்தியை அவருடைய பாதுகாவலர்களே கொன்றதை பார்த்த ராஜேஷ், ஹிட்லர், டால்ஸ்டாய், காமராஜர், செல்லம்மா, பாரதி, ஐன்ஸ்டைன் என 52 வாரங்களுக்கு பல்வேறு ஆளுமைகள் குறித்து எழுதியுள்ளார். ஜோதிடம், புரியாத புதிர் உள்ளிட்ட புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.
ரோஜா சீரியல்
ரோஜா சீரியலில் டைகர் மாணிக்கம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கொரோனா காலத்தில் ராஜேஷ் தான் கற்ற விஷயங்களை மக்களுடன் பகிர்வதற்காகவே யூடியூப் சேனலை ஆரம்பித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 18 தமிழர்கள் கெய்ரோவில் கப்பலில் சிக்கிய போது ராஜேஷின் வீடியோக்களை பார்த்து மன அழுத்தத்தை குறைத்துக் கொண்டதாக கூறியிருந்தனர்.
புகைப்பிடித்தால்
இந்த நிலையில் இவர் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: புகைப்பிடித்தால் நுரையீரல் பாதிக்கும், மது குடித்தால் கல்லீரல் பாதிக்கும், பெண் சகவாசம் இருந்தால் பிரச்சினையாகும் என்பதால் எனக்கு கெட்ட பழக்கம் என்றாலே பயமாக இருந்தது.
பயம்
பயம் வாழ்க்கையில் தேவை. அதற்காக பயந்துகிட்டே இருக்கக் கூடாது. அசட்டு தைரியம் என்பது வருகிற ஆபத்தின் அஸ்திவாரம். நான் நடித்துக் கொண்டிருக்கும் போதே ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்தது காலத்தின் கட்டாயம்!
ரியல் எஸ்டேட்
எம்ஜிஆருடன் எனக்கு 4 வருடங்கள் பழக்கம். ஜானகியுடன் 10 ஆண்டுகள் பழக்கம். எனது பழக்கவழக்கமும் எனது குணமும் சினிமாவுக்கு பொருந்தாது. ஜேப்பியார்தான் என்னை ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்ய சொன்னார்.
மயக்கம்
ரியல் எஸ்டேட் என்றால் என்னவென்றே தெரியாது. இதில் பணம் கொட்டினாலும் எனக்கு பிடிக்காத தொழில். பாதையெல்லாம் மாறிவரும், பயணம் முடிந்துவிடும், மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.
கமல் சொன்னது இதுதான்
நான் சினிமாவை விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்த போது கமல் சார் , என்னிடம் வந்து, "அருமையாக நடித்துக் கொண்டிருந்தீர்கள். ஏன் அதை விட்டுவிட்டு பிசினஸுக்கு வந்துவிட்டீர்கள். ஒரு நல்ல நடிகனை திரையுலகம் இழக்கிறது. டைரக்டர் ராஜேஷாக மரணம் அடைவதை விட, நடிகர் ராஜேஷாக மரணம் அடைவதை விட, பணக்கார ராஜேஷாக மரணமடைவதை நான் விரும்புகிறேன்" என கமல் சொன்னதாக ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கமல் ஆசை நிறைவேறியது
நடிகர் ராஜேஷுக்கு கமலை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டதாக எஸ்.வி.சேகர் ஒரு சேனலுக்கு அளித்த இரங்கல் செய்தியில் தெரிவித்திருந்தார். என்னதான் ராஜேஷின் ஆசை நிறைவேறாவிட்டாலும், பணக்கார ராஜேஷாக சாக வேண்டும் என்ற கமலின் ஆசை நிறைவேறிவிட்டது. ஆம்! ராஜேஷ் இறக்கும் போது பெரிய பணக்காரர்தான்!
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications