டெல்லி அஸைன்மென்ட்.. களமிறங்கிய ரஜினிகாந்த்.. அதிமுக பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
சென்னை: தமிழக அரசியல் களம் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதிமுகவில் தொடர்ந்து விரிசல் ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி, வேலுமணி அணிக்குள் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சனையை சரி செய்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார்.
அதிமுக நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிமுகவினர் மற்றும் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகள் கூறுகையில், "ரஜினிகாந்த் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று நீண்ட காலமாக கூறப்பட்டது. ரஜினி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ரஜினியும் அரசியலுக்கு வருவதை சூசகமாக அறிவித்தார்.

ஒருகட்டத்தில் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று ரஜினி அறிவித்தார். 2021 சட்டமன்ற தேர்தலுக்காக ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவார் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவர் அரசியலில் இறங்க மாட்டேன் என்று பின் வாங்கினார். ரஜினி அரசியலில் இறங்கவில்லை என்றாலும், அரசியலில் அவர் முக்கிய சக்தியாகவே உள்ளார். திமுக, பாஜக கட்சிகளுடன் அவர் நெருக்கமாக உள்ளார்.
சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை ரஜினி சந்தித்தார். இப்போதும் அவர் தமிழ்நாடு அரசியலை உற்று கவனித்து வருகிறார். தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கும் முயற்சி நடைபெற்றது. இதற்கு ரஜினி தான் காரணமாக இருந்தார் என்று தகவல் வெளியானது.
அந்த முயற்சி கைக்கொடுக்காமல் போனது. மேலும் அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி சண்முகம் அணி திரண்டனர். தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அணி தவெகவுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதிமுகவுடனும் ரஜினிக்கு நெருங்கிய தொடர்புகள் உள்ளன. அதிமுகவின் பிரச்சனையை சரி செய்வதற்காக கடந்த ஒரு வாரமாக ரஜினி தீவிர முயற்சி செய்து வருகிறார். இதற்காக அதிமுக மற்றும் பாஜகவில் உள்ள தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மூலமாக ரஜினிகாந்த ஆலோசனை செய்து வருகிறார். தமிழ்நாட்டின் நலனுக்கு அதிமுக மிகவும் அவசியம் தேவை.
உங்களுக்குள் சண்டை போடுவதை நிறுத்தி, இணைந்து பணியாற்றுங்கள் என்று அதிமுக மூத்த நிர்வாகிகளிடம் ரஜினி நேரடியாக பேசியுள்ளார். கட்சி தொடங்கி 2 வருடங்களிலேயே விஜய் முதலமைச்சராகியுள்ளார். அரசியலுக்கு வராமல் போனதை நினைத்து ரஜினி வருத்தப்படுகிறார். என் உடல்நலம் ஒத்துழைத்தால் களத்தில் இறங்கி வேலை பார்ப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்" என்றனர்.












Click it and Unblock the Notifications