தனியாக காரோட்டி கொண்டு ரஜினி எங்கே போனார் தெரியுமா.. காதை கொடுங்க சொல்றோம்!
காரை ஓட்டிக் கொண்டு ரஜினி எங்கே போனார் என்ற தகவல் வெளியாகி உள்ளது
சென்னை: முதலில் அது ரஜினிதானா என்று டக்கென புரியவில்லை.. மாஸ்க் கட்டியிருந்தாலும், அவர் ரஜினிதான் என்பது உறுதியானது.. ஆனால் காரை எடுத்து கொண்டு இந்த லாக்டவுன் நேரத்தில் ரஜினி எங்கே போனார் என்ற தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
நேற்று முதல் ரஜினி போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. அன்னைக்கு பிரதமர் விளக்கேத்த சொன்னபோது வீட்டை விட்டு வெளியே வந்து விளக்கேற்றி விட்டு போனார்.. அதற்கு பிறகு ரஜினியை பார்க்கவில்லை.. ஆனால் அவரை பற்றின தகவல்கள் மட்டும் வந்து கொண்டே இருந்தன.

அரசியல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்துகிறார், போயஸ் கார்டனில் விஐபிக்கள் வந்து போகிறார்கள், வீடியோ மூலம் கூட்டணி, அரசியல் சம்பந்தமாக பேச்சு நடத்துகிறார் என்றெல்லாம் செய்திகள் கசிந்தபடியே இருந்தன. ஆனால் இப்போது வரை அவை உறுதிப்படுத்தப்படவும் இல்லை.
இந்த சமயத்தில், சென்னை படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.. லாக்டவுனுக்குள் லாக்டவுன் அமலில் உள்ளது.. தீவிர கட்டுப்பாடுகளும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.. இப்படிப்பட்ட நேரத்தில், எதற்குமே வெளியே வராத ரஜினி நேற்று வெளியே வந்துள்ளார்.. லம்போர்கினி காரில் ரிலாக்ஸாக உட்கார்ந்து கொண்டு கார் ஓட்டி சென்றுள்ளார்.. முகத்தில் மாஸ்க் கட்டி உள்ளார்.. இது சம்பந்தமான வீடியோ, போட்டோவும் வெளியானது.
ஆனால் ரஜினி எங்கே போகிறார் என்று தெரியாமலேயே, #LionInLamborghini என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி விட்டனர் ரசிகர்கள்.. அவர் எங்கே போகிறார் என்பதைவிட, ரொம்ப நாள் கழித்து தங்கள் தலைவரை பார்த்ததுதான் அவர்களுக்கு குஷியாக இருந்தது. ஆனால், ரஜினி சென்றது திதி கொடுப்பதற்காகத்தான் என்று தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கமாக, ஆடி அமாவாசைக்கு தன் முன்னோர்களுக்கு ரஜினி திதி தருவாராம்.. அப்படித்தான், நேற்று ஆடி அமாவாசை என்பதால் காரிலேயே வெளியே சென்று திதி கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்... ஆனால் காரை அவரே ஏன் ஓட்டிக் கொண்டு போனார் என்று தெரியவில்லை.. எனினும் காருக்குள் இருந்தாலும், மாஸ்க் அணிந்தபடியே சென்றது ஒரு முக்கிய விழிப்புணர்வாகவே பார்க்கப்படுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications