சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. அப்போ உதயநிதிகிட்ட சீரியஸா பேசினாரே ரஜினி.. இப்போது திடீரென ஆளுநருடன் மீட்.. 2 கேள்விகள்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆளுநர் ஆர். என் ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தியது 4 முக்கியமான கேள்விகளை எழுப்பி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் ஆளுநர் ஆர். என் ரவியை இன்று அவரின் இல்லத்தில் சந்தித்தார். அரசியல் நிமித்தமாகவும், மரியாதை நிமித்தமாகவும் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இன்று ஆளுநரை சந்தித்து சுமார் 30 நிமிடங்கள் ரஜினிகாந்த் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்தவர்..இதில் அரசியல் பேசினோம். ஆனால் அதை பற்றி உங்களிடம் சொல்ல முடியாது என்றார்.

மேலும் மீண்டும் அரசியலுக்கு வருவது பற்றிய திட்டம் என்னிடம் எதுவும் இல்லை என்று ரஜினிகாந்த் கூறினார்.

சொல்ல முடியாத அரசியல் என்ன? புதிர் போட்ட ரஜினி.. கோவைக்கு பறக்கும் அமித் ஷா.. திடீரென எழுந்த கேள்வி! சொல்ல முடியாத அரசியல் என்ன? புதிர் போட்ட ரஜினி.. கோவைக்கு பறக்கும் அமித் ஷா.. திடீரென எழுந்த கேள்வி!

கேள்விகள்

கேள்விகள்

இந்த சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்தும் - உதயநிதியும் நெருக்கமாக இருந்தது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. கடந்த ஜூலை 28ம் தேதி செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் ரஜினிகாந்த் முதல்முறையாக குடும்பத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த நிகழ்வில் உடன் இருந்தார்.

ரஜினி உதயநிதி

ரஜினி உதயநிதி

பிரதமர் மோடி வருவதற்கு முன்பே நிகழ்விற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் முன் வரிசையில் அமர்ந்து இருந்தார். விழா நிகழ்வுகளை பிரமிப்புடன் ரஜினிகாந்த் ரசித்தார். இதில் ரஜினிகாந்த், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். உதயநிதியை பார்த்து ரஜினிகாந்த் எதோ ஒன்று சொன்னார். இவர்கள் இருவரும் நீண்ட நட்பாக பேசிக்கொண்டு இருந்தனர்.

சந்தேகம்

சந்தேகம்

இடையில் ரஜினிகாந்த் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு "ஓகேவா" என்று கேட்டார். இதை பார்த்து உதயநிதி ஸ்டாலின் பின்னர்.. கையை அசைத்து எஸ் என்று கூறினார். இவர்கள் மிக மிக நெருக்கமாக அந்த நிகழ்வில் காணப்பட்டனர். இப்படிப்பட்ட நிலையில்தான் ஆளுநரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். ஆளுனருடன் அரசியல் பேசியதாக ரஜினிகாந்த் கூறி உள்ளார். ஆளுநர் பாஜகவிற்கு நெருக்கமானவர். கண்டிப்பாக திமுக அரசியல் பேசி இருக்க வாய்ப்பு இல்லை.

கேள்விகள்

கேள்விகள்

அப்படி இருக்கும் போது ஆளுநரிடம் ரஜினிகாந்த் என்ன பேசி இருப்பார் என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

கேள்வி 1 - திமுகவை எதிர்க்க பாஜக ரஜினியை பயன்படுத்துகிறதோ என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது. ஆனால் உதயநிதி போன்றவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ரஜினிகாந்த் திமுகவை எதிர்ப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கேள்வி 2 - அரசியலுக்கு வர மாட்டேன் என்று ரஜினி திட்டவட்டமாக கூறி உள்ளார். அப்படி என்றால் அரசியலுக்குள் வராமல் வெளியில் இருந்து லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சினிமா

சினிமா

கேள்வி 3 - அதிமுகவில் தலைமை பிரச்சனை எழுந்துள்ள நிலையில், அதிமுகவிற்குள் ரஜினியை நுழைக்கும் வேலைகள் ஏதாவது நடக்கிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. 2020லேயே இந்த பேச்சு அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

கேள்வி 4 - இதெல்லாம் படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் எல்லாம் ரஜினி இப்படி எதையாவது பேசுவது வழக்கம். அப்படித்தான் இந்த முறையும் ஜெயிலர் படத்திற்காக ரஜினி இப்படி பேசுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது..

English summary
Actor Rajinikanth meet with Governor R N Ravi raises 4 important questions. ஆளுநர் ஆர். என் ரவியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தியது 4 முக்கியமான கேள்விகளை எழுப்பி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X