டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும்.. ராஜ்பவனுக்கு விரைந்த ரஜினிகாந்த்.. ஆளுநருடன் சந்திப்பு
சென்னை: சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துப் பேசி வருகிறார்.
Recommended Video
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் "அண்ணாத்த!". கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று இருந்த போதிலும், வசூல் ரீதியாக லாபகரமானதாகவே அமைந்ததாகத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது

ரஜினி
இதற்கு அடுத்து நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற படத்தில் நடிக்க உள்ளார். திரைப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பீஸ்ட் படத்தின் முடிவால் ஜெய்லர் படத்தின் எழுத்துப் பணிகளில் இயக்குநர் நெல்சன் கவனம் செலுத்தி வருகிறார். அது முடிந்த பின்னர் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி பயணம்
இந்தச் சூழலில் இரு நாட்களுக்கு முன்பு, நடிகர் ரஜினிகாந்த் திடீரென டெல்லி சென்று இருந்தார். முதலில் ஜெய்லர் படம் தொடர்பாகவே அவர் டெல்லி சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், அதன் பின்னரே 75வது விழா சுதந்திர தின விழா தொடர்பாக அவர் டெல்லி சென்றது தெரிய வந்தது. அதாவது, சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக மத்திய அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கொண்டு குழு ஒன்றை அமைத்தது.

ஆளுநருடன் சந்திப்பு
இந்த குழு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே நடிகர் ரஜினி டெல்லி சென்றது தெரியவந்தது. இந்தச் சூழலில் இன்றைய தினம் ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகர் ரஜினி சந்தித்து உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் பேசி வருகிறார்.

என்ன காரணம்
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் ரஜினிகாந்த்- ஆளுநர் சந்திப்பு தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 75ஆவது சுதந்திர தின விழா அடுத்த வாரம் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், இதற்கான நிகழ்ச்சி தொடர்பாக இருவரும் ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications