ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முடியாம போச்சு.. பேமிலி பங்ஷன்.. ரஜினிகாந்த் விளக்கம்
சென்னை: குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அம்மாநில சிறைக்கு சென்று நேரில் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் ரூ317 கோடி ஊழல் வழக்கி அம்மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது சந்திரபாபு நாயுடு சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவரை வெளியே கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சந்திரபாபு நாயுடுவை தமது குருநாதராக கொண்டிருந்து பின்னர் முதுகில் குத்தப்பட்ட நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கட்சியில் இணைந்து இப்போது அமைச்சராகி இருப்பவர் நடிகை ரோஜா. அதனால் சந்திரபாபு நாயுடுவின் கைது சம்பவத்தை பட்டாசு வெடித்து கொண்டாடி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார் நடிகை ரோஜா.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷை தொடர்பு கொண்டு, நலம் விசாரித்தார். அத்துடன் சந்திரபாபு நாயுடு தவறு செய்திருக்கமாட்டார் எனவும் ரஜினிகாந்த் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கும் நடிகை ரோஜா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
#WATCH | Actor Rajinikanth leaves for Coimbatore to participate in the family event, from Chennai airport
— ANI (@ANI) September 17, 2023
Actor Rajinikanth says, "I was about to meet former Andhra Pradesh CM and TDP chief Chandrababu Naidu but due to family function it didn't happen". pic.twitter.com/2mRurGxmIy
இதனிடையே ஆந்திரா சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க நடிகர் ரஜினிகாந்த் மனு கொடுத்துள்ளார்; இன்று ஆந்திரா சிறையில் இந்த சந்திப்பு நடைபெறும் என கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு இன்று நடிகர் ரஜினிகாந்த் கோவை செல்வதற்காக வந்தார். அப்போது செய்தியாளர்கள் ஆந்திரா பயணம் பற்றி கேள்வி கேட்டனர். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோவை செல்கிறேன். அதனால் ஜெயிலுக்குப் போய் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முடியாமல் போய்விட்டது என்றார்.
நடிக ரஜினிகாந்தின் 2-வது மகள் சவுந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகனை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு99 மொட்டை அடித்து காது குத்தும் விழா நடக்க இருக்கிறது. இதற்காகவே நடிகர் ரஜினிகாந்த் கோவை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த செய்தியை நேற்று நமது ஒன் இந்தியா இணையதளம் வெளியிட்டிருந்தது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications