"சார் இந்த காவிரி பிரச்சினை.." வந்து விழுந்த கேள்வி! டக்குனு பதில் சொல்லாமல் ஜகா வாங்கிய ரஜினிகாந்த்
சென்னை: ஹைதராபாத் செல்ல சென்னை ஏர்போர்ட் வந்த ரஜினி செய்தியாளர்களிடம் பேசிய நிலையில் காவிரி விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்காமல் ஜகா வாங்கினார்.
தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டராக வலம் வரும் ரஜினிகாந்த்.. இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ஜெயிலர். அவரது முந்தைய படமான "அண்ணாத்த" சரியாகப் போகாத நிலையில், ஜெயிலர் படத்திற்கு அனைவரும் காத்திருந்தனர்.

ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்த பிறகும் கூட பெரியளவில் புரோமேஷன்கள் இல்லாமலேயே இருந்தது. இருப்பினும், படத்தின் டிரைலர் வந்த பிறகு அது முற்றிலுமாக மாறியது. அந்த ஒரே டிரைலர் ஜெயிலர் மீதான எதிர்பார்ப்பு எகிறச் செய்தது.
ரஜினி: படம் ரிலீசுக்கு பிறகு, ரசிகர்கள் இதைக் கொண்டாடித் தீர்த்தனர். ரஜினி மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இருவருக்கும் இது கம்பேக் திரைப்படமாகப் பார்க்கப்பட்டது. படத்தில் சற்று வன்முறை இருந்தாலும் கூட அனைத்து தரப்பு ரசிகர்களும் படத்தைக் கொண்டாடினர். வசூலில் ரஜினியின் ஜெயிலர் புது சாதனையைப் படைத்தது. இதற்கிடையே ரஜினி இப்போது லைகா தயாரிப்பில் அடுத்து ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே இந்தப் படப்பிடிப்பிற்கு ஹைதராபாத் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு இன்று ரஜினிகாந்த் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாளை 170ஆவது படத்தின் பட ஷூட்டிங் ஆரம்பிக்கிறது. அதற்காக நான் அங்கே செல்கிறேன். இன்னும் படத்திற்கான டைட்டில் வைக்கப்படவில்லை. டைட்டில் குறித்து பின்பு தான் அறிவிப்பு வெளியாகும்.
அடுத்த படம்: ஜெயிலர் திரைப்படத்தைப் பொறுத்தவரை நாங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் மிகப் பெரிய ஒரு வெற்றி கிடைத்துள்ளது. அடுத்து எனது 170ஆவது திரைப்படத்தை லைகா தயாரிப்பில் அடுத்து ஞானவேல் இயக்குகிறார். இது சமூக கருத்து கொண்ட பிரம்மாண்டமான பொழுது போக்கு படமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
மவுனம்: அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் நடிகர் ரஜினி காந்த்திடம் காவிரி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர், அது வரை நன்றாகப் பதில் சொல்லி வந்த ரஜினிகாந்த் இந்த கேள்வி வந்ததும் பதில் அளிக்காமல் ஜகா வாங்கினார். அப்படியே அங்கிருந்து கிளம்பினார். எப்போதும் காவிரி பிரச்சினை வரும் போது ரஜினி மவுனமே காக்கும் நிலையில், இப்போதும் அதை நிலைப்பாட்டை எடுக்கிறார்.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு கர்நாடகா இடையே எப்போதும் மோதல் போக்கே இருக்கும். இந்தாண்டும் அதற்கு விதி விலக்கு இல்லை. இந்த ஆண்டும் தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைத் தரக் கூடாது என்று கன்னட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுப்பதைக் கண்டித்து அங்கே சமீபத்தில் பந்தும் நடைபெற்றது.
இது மட்டுமின்றி நடிகர் சித்தார்த் தனது "சித்தா" படத்தின் புரோமேஷனுக்கு பெங்களூர் சென்றிருந்தார். அப்போது நிகழ்ச்சியில் அவர் பேசிக் கொண்டிருந்த போது உள்ளே வந்த கன்னட அமைப்பினர் அவரை பேச விடாமல் தடுத்தனர். அவர் பதில் அளிக்க முயன்ற போதிலும் அதற்கும் அனுமதிக்கவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications