"துள்ளத்துடிக்க சாகக் கொடுத்த குடும்பங்களின் நிலை.. புத்தியைக் கொடு இறைவா” - ராஜ்கிரண் ஆதங்கம்
சென்னை: "இனிமேலும் இப்படியான கூட்டங்களில் போய் உயிரை விடாமல், நம் வாழ்க்கையை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை, எல்லா பாமர மக்களுக்கும் கொடு இறைவா..." என கரூர் விஜய் பரப்புரை நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டது. அதோடு, கரூர் மாவட்டம் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்த 31 வயதான கவின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

9 குழந்தைகள், 17 பெண்கள், 14 ஆண்கள் என மொத்தம் 40 பேர் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் பெண் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தமது விசாரணையை தொடங்கி உள்ளது. சிபிஐ விசாரணை கோரி தவெக சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் பிரச்சாரத்துக்கு தடை கோரியும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் நண்பகல் 12 மணிக்கு பரப்புரை மேற்கொள்வார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவர் வந்து சேர இரவு 7.40 மணியாகிவிட்டது. ஆனால், காலை 11 மணியிலிருந்தே அந்த இடத்தில் அதிக கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது.
11 மணியிலிருந்தே கூடிய கூட்டம் ஒருபுறமும், விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்ட இடத்திலிருந்து சேர்ந்த கூட்டம் ஒருபுறமும் என, பரப்புரை நடந்த இடத்தில் ஏராளமானோர் கூடினர். வெகு தாமதமாக வந்த விஜய், அங்கு 20 நிமிடங்கள் பேசினார். அவர் பேசியபோதே, ஒருசிலர் மயக்கம் அடைந்தனர்.
விஜய் பரப்புரை செய்யப்படும் இடத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அப்பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் செய்தி வந்துகொண்டிருந்தது. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுமார் 8.30 மணியளவிலேயே கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகத் தொடங்கின. தொடர்ந்து, நேரம் ஆக ஆக, பலி எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தது. 39 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார். நெரிசலில் சிக்கி பலியான 40 பேரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கரூரில் நடந்த துயரச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ராஜ்கிரன், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாகப் பதிவிட்டுள்ளார்.
"மிகப்பெரும் மன அழுத்தத்தையும், பரிதவிப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. என்னதான் ஆறுதல்படுத்தப் பார்த்தாலும் மனம் தவிப்பதை, என்னால் நிறுத்த முடியவில்லை. எனக்கே இந்த நிலையென்றால், நாற்பது உயிர்களை துள்ளத் துடிக்க சாகக்கொடுத்த, அந்தக் குடும்பங்களின் நிலைமை என்னவாகும்.
இறைவா, அந்தக் குடும்பங்களை ஆறுதல் படுத்து. இனிமேலும் இப்படியான கூட்டங்களில் போய் உயிரை விடாமல், நம் வாழ்க்கையை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற புத்தியை, எல்லா பாமர மக்களுக்கும் கொடு" எனப் பதிவிட்டுள்ளார் ராஜ்கிரண்.
-
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்












Click it and Unblock the Notifications