இருமுடி கட்டி.. நடிகர் கார்த்தி - ரவி மோகன் திடீர் சபரிமலை பயணம்.. என்ன காரணம்?
சபரிமலை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக ரவி மோகன் மற்றும் கார்த்தி ஆகியோர் உள்ளனர். இருவரும் இன்று சபரிமலை சென்றுள்ளனர். கார்த்தி இருமுடியை தலையில் சுமந்து இருப்பது போன்ற போட்டோவும், நடிகர் ரவி மோகனுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவும் இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரவி மோகன். ஜெயம் ரவி என்ற பெயரை அவர் சமீபத்தில் மாற்றினார். ரவி மோகன் என்று தன்னை அழைக்கும்படி அவர் கூறினார். அதேபோல் நடிகர் கார்த்தியும் முன்னணி நடிகராக உள்ளனர்.

அடிப்படையில் ரவி மோகன், கார்த்தி ஆகியோர் நல்ல நண்பர்களாக உள்ளனர். இவர்கள் 2 பேரும் சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சேர்ந்து நடித்தனர்.
இந்நிலையில் தான் திடீரென்று நடிகர் ரவி மோகனும், கார்த்தியும் இன்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இருவரும் மாலை அணிந்து விரதம் கடைப்பிடித்து ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதில் நடிகர் கார்த்தி ஐயப்பனுக்கு உகந்த கருப்பு நிற உடை அணிந்து இருமுடி சுமந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். அதேபோல் நடிகர் ரவி மோகன் நீலநிற ஆடை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

ரவி மோகன், கார்த்தி ஆகியோர் ஐயப்பன் கோவிலுக்கு சென்ற போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. இதில் ரவி மோகன் ஏற்கனவே சபரிமலைக்கு சென்ற அனுபவம் கொண்டவர். இதற்கு முன்பு நடிகர் ஜெயராமுடன் அவர் சபரிமலை சென்றிருந்தார்.
கார்த்தி முதல் முறையாக விரதம் கடைப்பிடித்து இருமுடி கட்டி சபரிமலை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இருவரும் திடீரென்று சபரிமலை செல்வதற்கான காரணம் குறித்த விபரம் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.
ரவி மோகன், கார்த்தி ஆகியோர் ஐயப்பன் கோவிலுக்கு சென்ற போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. தற்போது ரவி மோகன் மற்றும் கார்த்தி ஆகியோர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. கார்த்தி ‛வா வாத்தியார்' மற்றும் சர்தார் 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றன.
அதேபோல் ரவி மோகனை எடுத்து கொண்டால் ‛காராத்தே பாபு', ஜீனி திரைப்படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். விரைவில் தனி ஒருவன் திரைப்படத்தின் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications