மனைவியை கட்டிப்போட்டு.. வீட்டிற்குள் நடந்த கொள்ளை.. பதறிப்போன நடிகர் ஆர்கே.. சிசிடிவியில் ஷாக்
சென்னை: நடிகர் ஆர்.கே வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆர்.கே. இவர் சென்னையில் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் வசித்து வருகிறார்.
இவருக்கு ராஜி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். பங்களாக்கள் அதிகம் இருக்கும் அந்த தெருவில் அடுத்தடுத்து வீடுகள் கிடையாது.

திருட்டு
சாலைகளும் பெரும்பாலும் இங்கு வெறிச்சோடியே காணப்படும். இந்த நிலையில்தான் ஆர்.கே இல்லாத நேரம் பார்த்து , அவரின் வீட்டிற்குள் கொள்ளையர்கள் புகுந்து உள்ளனர். பின் பக்கம் வழியாக எகிறி குதித்து வந்த கொள்ளையர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். அதன்பின் வீட்டிற்குள் வந்ததும், வீட்டின் அனைத்து கதவுகள், ஜன்னல்கள் என்று அனைத்தையும் மூடி உள்ளனர். அதோடு ஆர்.கேவின் மனைவி ராஜியின் போனையும் பிடுங்கி உள்ளனர்.

நடிகர் ஆர்.கே
தனியாக இருந்த ராஜியை கட்டிப்போட்டு கொன்று விடுவேன் என்று மிரட்டி உள்ளனர். கூர்மையான ஆயுதங்களை வைத்து ராஜியை மிரட்டி உள்ளனர். அதன்பின் வீட்டில் எங்கெல்லாம் தங்கம், பணம் இருக்கிறது என்பதை கேட்டு தொல்லை செய்துள்ளனர். சுமார் 20 நிமிடம் வீட்டிற்கு உள்ளே இருந்து அங்கிருந்த பொருட்களை எல்லாம் மூட்டையில் கட்டி உள்ளனர். 3 கொள்ளையர்கள் இணைந்து இந்த செயலை செய்ததாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது?
இதில் பீரோவில் இருந்த 200 சவரன் நகையை அவர்கள் கொள்ளையடித்து உள்ளனர். அதோடு ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் வந்தவழியே சென்று, பைக்கில் இவர்கள் எஸ்கேப் ஆகி உள்ளனர். அதன்பின் வீட்டிற்கு ஆர்.கே வந்து பார்த்த போதுதான் மனைவி கட்டிபோடப்பட்டு இருந்ததே தெரிய வந்தது. இதையடுத்து உடனே ஆர்.கே சார்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நந்தம்பாக்கம் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சிசிடிவி
அங்கு இருந்த கை ரேகைகளை எடுத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆர்.கேவின் மனைவியிடம் வாக்குமூலமும் பெற்றனர். அதேபோல் அவரின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில்தான் போலீசாருக்கு அதிர்ச்சி அளிக்கும் விஷயம் தெரிய வந்துள்ளது. அந்த வீட்டில் நேபாளி ரமேஷ் என்பவர் இதற்கு முன் பணியாளராக இருந்துள்ளார். அவர்தான் இந்த கொள்ளையை திட்டமிட்டு உள்ளார்.

விசாரணை
முகத்தை மறைத்துக்கொண்டு அவர் தனது இரண்டு நண்பர்களுடன் வந்து வீட்டில் கொள்ளையடித்து உள்ளார். இத்தனை நாட்கள் வீட்டில் வேலை பார்த்த நிலையில், எப்படி திருடலாம், எப்படி தப்பிக்கலாம் என்பதை பக்காவாக திட்டமிட்டு அவர் செயல்பட்டு உள்ளார். இது தொடர்பாக போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த போலீசார் தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.
-
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications