Vijay Sanjeev: விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு ஆட்டோவில் சென்ற நண்பர் சஞ்சீவ்! என்ன காரணம்?
சென்னை: தவெக தலைவர் விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு நடிகர் சஞ்சீவ் ஆட்டோவில் வந்திருந்துவிட்டு சென்றார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவர் ஏன் ஆட்டோவில் வந்தார் என தெரியவில்லை.
நடிகர் சஞ்சீவ், விஜய்யின் நண்பர், இருவரது வீடுகளும் அருகருகே உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நீலாங்கரை வீட்டிற்கு நடிகர் சஞ்சீவ் ஆட்டோவில் வந்துவிட்டு சென்றுள்ளார்.

விஜய்யின் பெரும்பாலான படங்களில் நண்பராக நடித்தவர் சஞ்சீவ். இவர் உண்மையிலேயே நண்பரும் கூட! இவரது அத்தை மஞ்சுளா விஜயகுமார், அது போல் இவரது சகோதரி மறைந்த நடிகை சிந்து. சஞ்சீவ், மெட்டி ஒலி சீரியலில் நடித்திருந்தார். பின்னர் திருமதி செல்வம் சீரியலில் லீடு ரோல் செய்திருந்தார்.
இதையடுத்து சந்திரலேகா, நிலாவே வா, பத்ரி உள்ளிட்ட படங்களில் விஜய்யின் நண்பராக நடித்திருந்தார். அது போல் சாமி 2, யானை, ட்ராமா ஆகிய படங்களிலும் சஞ்சீவ் வெங்கட் நடித்திருந்தார். இவர் நடிகை ப்ரீத்தியை மணந்தார்.
தற்போது இவர் நீலாங்கரையில் இருந்து வருகிறார். கொரோனா காலத்தில் சஞ்சீவ் வீட்டில் தனியாக இருந்த போது அவருக்காக விஜய் உணவு சமைத்து கொண்டு வந்து செக்யூரிட்டியிடம் கொடுத்து விட்டு சென்றாராம்.
அது போல் சஞ்சீவ், குழந்தைகளுக்கு அசைவம் சமைத்து தரும் விஜய், ப்ரீத்தி சைவம் என்பதால் அவருக்கு தனியாக சைவ சாப்பாட்டையும் தந்ததாக ப்ரீத்தியே ஒருமுறை தெரிவித்திருந்தார். அண்மையில் கரூரில் தவெக பொதுக் கூட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான போது விஜய் அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு அவர் வெளியே வரவில்லை. கரூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு அவர் வந்த போது கூட செய்தியாளர்களை சந்திக்க விஜய் மறுத்துவிட்டார். இதுகுறித்து சஞ்சீவிடம் கேட்ட போது, விஜய் எப்போதும் எதற்காகவும் பயப்படமாட்டார்.
விரைவில் செய்தியாளர்களை சந்திப்பார். யாராக இருந்தாலும் இத்தனை உயிர்கள் போன பிறகு மிகவும் வருத்தமாக இருக்கும். விஜய் இப்போது மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.
தன்னை பார்க்க வந்தவர்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என அவர் மனதில் மிகவும் வலியுடன் உள்ளார். நான் விஜய்யிடம் பேசினேன். இந்த நிலையில் என்னதான் ஆறுதல் சொன்னாலும் கோபம் வந்தாலும் வந்துவிடும். ஆகவே நான் எந்த ஆறுதலையும் சொல்லாமல் உடம்பை பார்த்துக் கொள், கடவுளை நம்பு என்று மட்டும் சொல்லிவிட்டேன்" என சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினம் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு சஞ்சீவ் ஆட்டோவில் வந்துவிட்டு சென்றுள்ளார். அவர் ஏன் ஆட்டோவில் வந்தார் என தெரியவில்லை. மேலும் அவரது வீடு பக்கத்து தெருவில் இருக்கும்போது அவர் ஆட்டோவில் ஏன் வந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications