புத்தாண்டு நாளில் நடிகர் சந்தானம் செய்த செயல்.. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்! அப்படி என்ன செய்தார்
சென்னை: புத்தாண்டு தினத்தில் நடிகர் சந்தானம் செய்த ஒரு செயல் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழில் டிவியில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதை அடுத்தகட்ட இலக்காக இருக்கும். ஆனால், அனைவருக்கும் இது ஈஸியாக அமைவதில்லை.

முதலில் டிவியில் இருந்து செல்பவர்களால் சினிமாவில் சாதிக்கவே முடியாது என்ற நிலையை மாற்றியவர் சந்தானம்.. சின்னதிரையில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக உயர்ந்தவர் சந்தானம்,
சந்தானம்: கடந்த 2016இல் சிம்பு, நயன்தாரா நடித்த 'இது நம்ம ஆளு' படத்திற்குப் பிறகு காமெடியனாக நடிப்பதை நிறுத்திவிட்டார். அதன் தவிர்த்து, ஹீரோவாக மட்டுமே நடிக்கத் தொடங்கினார். அவர் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு', 'டிடி ரிட்டர்ன்ஸ்' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றது.
இதன் மூலம் அவர் முன்னணி நாயகனாக உயர்ந்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் '80ஸ் பில்டப்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 2024ஆம் ஆண்டிலும் அவரது நடிப்பில் படங்கள் வெளியாக ரெடியாக உள்ளது.
செம செயல்: புத்தாண்டை பொதுவாக பார்ட்டி, சுற்றுலா என்று தான் பலரும் கொண்டாடுவார்கள். ஆனால், புத்தாண்டில் நடிகர் சந்தானம் செய்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். விவசாயம் மீது அதீத ஆர்வம் கொண்ட சந்தானம், புத்தாண்டு தினத்தில் மரம் நடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் "இனிய புத்தாண்டு வாழ்த்துகள், தொடர்ந்து மரம் நடுங்கள், ஒன்றாக உலகைக் குணப்படுத்துவோம்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
மரங்களை அதிகளவில் நடுவது சுற்றுச்சூழலுக்கு ரொம்பவே முக்கியமானது. அது நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன. அவை காற்றைச் சுத்தப்படுத்தி, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மரங்கள் மண் அரிப்பைத் தடுக்கவும், வெள்ளம் மற்றும் வறட்சியைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், மரங்கள் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாகவும், மனிதர்களுக்கு மன அமைதியையும் தருகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications