என் உயிர் போனால் சரவணன்தான் காரணம்.. முதல்வர் தனிப்பிரிவில் மனைவி சூர்யா ஸ்ரீ பரபரப்பு புகார்
சென்னை: என் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு நடிகர் சரவணன்தான் காரணம் என அவருடைய மனைவி சூர்யா ஸ்ரீ புகார் கொடுத்துள்ளார்.
1990 களில் நடிகராக வலம் வந்தவர் நடிகர் சரவணன், இவர் கருப்பாக இருந்தாலும் பார்ப்பதற்கு கலையாக இருப்பார். மேலும் நம் பக்கத்து வீட்டு பையன் போல் இருந்ததால் இவருக்கென ரசிகர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் இவர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்த நிலையில் அண்மையில் பருத்தி வீரன் படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவர் தனது முதல் திருமணம், இரண்டாவது திருமணம் உள்ளிட்டவை குறித்தெல்லாம் உருக்கமாக பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் தான் பேருந்தில் பெண்களை இடிப்பதற்காகவே பயணம் செய்வேன் என சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். இதனால் மகளிர் அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்தன.
மேலும் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து சரவணன் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு சீரியலிலும் கூட நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சரவணன் முகலிவாக்கத்தில் இரு வீடுகளை வாங்கினார். அங்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட கார் பார்க்கிங்கில் புரோக்கர் என அறிமுகமான ராமமூர்த்தி என்பவர் கடையை கட்டி அதற்கு மின் இணைப்பு பெற்று சொத்து வரியையும் கட்டிவிட்டார். இதனால் அவரிடம் இருந்து அந்த இடத்தை மீட்டுத் தர வேண்டு என அமைச்சர் தாமோ அன்பரசனிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் சரவணன் குறித்து அவருடைய மனைவி பரபரப்பு புகாரை முதல்வர் தனிப்பிரிவில் அளித்துள்ளார். அதிலும் சரவணன் ஏமாற்றியதாக சொல்லும் ராமமூர்த்தியும் அவருடைய மனைவியும் நல்லவர்கள். சரவணன் பொய் சொல்கிறார் என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் சரவணன் சொல்வதில் உண்மை இல்லை.
ஒரு பெண்ணை அவர் வீட்டில் திருமணம் செய்யாமல் வைத்திருக்கிறார். மேலும் என்னிடம் விவாகரத்து பெறாமல் அது எப்படி திருமணம் செய்ய முடியும் . முகலிவாக்கம் இடத்தில் உள்ள வீட்டில் அவருக்கு எந்த பங்கும் இல்லை. நான் காசு கொடுத்து வாங்கினேன். என்னை வீட்டை விட்டு வெளியேறுமாறு மிரட்டுகிறார். என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவர்தான காரணம் என தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications