ஒட்டுமொத்த சொத்துமே இதில் தான்.. சினிமாவுக்காக ‘சித்தப்பு’ சரவணனின் முயற்சி! நெகிழ்ந்த ரசிகர்கள்
சென்னை: பிரபல நடிகரான 'சித்தப்பு' சரவணன் சேலத்தில் புதிதாக ஸ்டுடியோ ஒன்றைக் கட்டி இருக்கிறார். சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் படப்பிடிப்பு ஸ்டுடியோக்கள் இல்லாத நிலையில் தனது ஒட்டுமொத்த சினிமா ஊதியத்தையும் போட்டு அந்த ஸ்டுடியோவை கட்டியிருப்பதாக கூறியுள்ளார் சரவணன்.
உயரமாக, சிகப்பாக, அழகாகத் தான் கதாநாயகர்கள் இருக்க வேண்டும் என்று தான் ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் இருந்தது. அதனை உடைத்து நிறம் ஒரு பொருட்டல்ல என நிரூபித்த நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த்.
நம்ம வீட்டு பையன் போலவே இருக்கிறார் என்ற பெயர் விஜயகாந்தை அனைத்து குடும்பங்களுக்கும் அழைத்துச் சென்றது. அதேபோல சினிமாவுக்கு வந்தவர் தான் சரவணன். பார்ப்பதற்கு விஜயகாந்த் போலவே இருக்கிறார் என்ற அறிமுகம் அவருக்கு சினிமாவில் பல வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்தது.

நடிகர் சரவணன்
அவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது நடிகை லட்சுமி. அவரது வீட்டிலேயே வைத்திருந்து பார்த்துக் கொண்டார். ஆரம்பத்தில் சில வாய்ப்புகள் கிடைத்தாலும் நாயகனாக பெரிய அளவில் சரவணன் ஜொலிக்க முடியவில்லை. பொண்டாட்டி ராஜ்ஜியம், சூரியன் சந்திரன், பார்வதி என்னை பாரடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். 1990 கால கட்டங்களில் அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன.
பிக் பாஸ்
இருந்த போதும் தொடர்ந்து அந்த வெற்றியை தக்க வைக்க முடியவில்லை. பெரிய இடைவேளைக்குப் பிறகு பருத்திவீரன் படத்தின் மூலம் அவருக்கு திரையுலகில் மிகப்பெரிய இடம் கிடைத்தது. தொடர்ந்து பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இருந்த போதும் பருத்திவீரன் சித்தப்பு கேரக்டர் தான் இன்று வரை சரவணன் அடையாளப்படுத்தி இருக்கிறது. தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் கலந்து கொண்டார். தற்போது பல படங்களில் நடித்து வரும் சரவணனுக்கு சட்டமும் நீதியும் வெப் சீரிஸும் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
சரவணன் ஸ்டுடியோ
இந்த நிலையில் சினிமாவில் சேர்த்த தனது மொத்த சொத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்து இருக்கிறார் சரவணன். அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் வடக்காடு ஊரில் சரவணன் ஸ்டுடியோ ட்ரீம் பேக்டரி என்ற பெயரில் படப்பிடிப்பு தளத்தை கட்டி இருக்கிறார். இன்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. அதில் இயக்குனர் பாண்டியராஜ் கலந்துகொண்டு ஸ்டுடியோவினை திறந்து வைத்தார். சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் உள்ளிட்ட பல பிரபலமான ஸ்டுடியோகள் இருந்தது. சென்னையில் வாகினி, ஏவிஎம் போன்ற ஸ்டூடியோக்களை போல ஒரு காலத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோ மிகப்பெரிய அளவில் இயங்கி வந்தது. தற்போது அதன் நுழைவாயில் மட்டுமே இருக்கிறது.
ட்ரீம் பேக்டரி
இந்த நிலையில் தான் சேலத்தில் இழந்த பெருமையை மீட்டெடுக்க தனது ஒட்டுமொத்த உழைப்பையும் போட்டு இந்த ஸ்டுடியோவை கட்டியதாக சொல்லி இருக்கிறார். சேலத்தில் படம் தயாரித்தால் ஓடாது என்ற பேச்சு பல காலங்களாக இருக்கிறது. ஆனால் சேலம் தான் ஒரு காலத்தில் சினிமாவில் முக்கிய மையமாக இருந்தது. அதை நினைத்தே தற்போது எனது சொந்த ஊரில் ஸ்டுடியோ கட்டி இருக்கிறேன். இதனால் எங்கள் ஊரில் இருக்கும் பலருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார் சரவணன். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்திருக்கும் சரவணன். இதனையடுத்து அவரை வாழ்த்தி வருகின்றனர் ரசிகர்கள். அதே நேரத்தில் பிற இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அந்த ஸ்டுடியோவில் படம் தயாரித்து சரவணனுக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கையை பிடித்துள்ளனர்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications