Sathyaraj: கோயமுத்தூர்காரனாக பெருமை! ஷூட்டிங் ஸ்பாட்டில் வீடியோ வெளியிட்ட சத்யராஜ்! என்ன காரணம்?
சென்னை: கோவை அவினாசி சாலையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை வைத்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்து சத்யராஜ் வீடியோவில் கூறியிருப்பதாவது: வணக்கம் , நான் இப்போது கோவையில் இருக்கிறேன். சொந்த ஊரில் இருப்பது பெரிய விஷயமா என நீங்கள் கேட்பீர்கள். நான் கோயமுத்தூருக்கு ஷூட்டிங்கிற்காக வந்திருக்கிறேன். படத்தின் பெயர் ஜி.டி.நாயுடு. ஆமாங்க! தந்தை பெரியாருடைய வாழ்க்கையை படமாக எடுத்தது போல், ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றையும் படமாக எடுக்கிறோம். இதில் ஜி.டி. நாயுடுவாக அன்பு நண்பன் மாதவன் நடிக்கிறார்.

இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார், வர்கீஷ் தயாரிக்கிறார். நான் ராமையா பிள்ளை என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இப்போது கோயமுத்தூரில் ஜி.டி.நாயுடு படத்திற்கான ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ஒரு மிகப் பெரிய மேம்பாலத்திற்கு நமது திராவிட மாடல் அரசு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டியுள்ளார்.
இதற்காக நானும் கோயமுத்தூர்காரன் என்கிற முறையில் பெருமைப்படுகிறேன். படக்குழுவின் சார்பில் முதல்வருக்கு வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். ஜி.டி.நாயுடுவின் குடும்பத்தாருக்கும் எங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி வணக்கம்! இவ்வாறு சத்யராஜ் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கோவை உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூர் வரை 16 கி.மீ. கொண்ட அவிநாசி சாலையில் முக்கிய பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிமுக ஆட்சியில் அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் கோவையில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்திற்கு ஜி. டி. நாயுடுவின் பெயரை தமிழக முதல்வர் சூட்டியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் சத்யராஜ் விடுத்துள்ள செய்தி.#GTNaidu #Sathyaraj#TamilnaduCM pic.twitter.com/iewjSH33d3
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) October 9, 2025
2016ஆம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது 2020 ஆம் ஆண்டு உப்பிலிபாளையம் டூ கோல்டுவின்ஸ் வரை ரூ 1621 கோடி ஒதுக்கப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கூடுதல் தேவைகளுக்காக பாலத்தின் மதிப்பீடு ரூ 1791 கோடியாக அதிகரிக்கப்பட்டது.
தற்போது இந்த பாலத்தின் பணிகள் முடிவடைந்து அதற்கு ஜி.டி.நாயுடுவின் பெயரை சூட்டிய முதல்வர் ஸ்டாலின் இந்த பாலத்தை இன்று திறந்து வைத்தார்.
நான்கு வழிப்பாதையான இந்த மேம்பாலத்தில், அண்ணாதுரை சிலை, நவ இந்தியா, ஹோப் காலேஜ், விமான நிலையம் ஆகிய நான்கு இடங்களில், ஏறு தளம் மற்றும் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளன. பாலத்தின் மத்தியில் 4 அடி அகலத்துக்கு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது.
மழை நீர் வடிகால் தமிழகத்திலேயே முதன் முறையாக, மழை நீர் சேகரிப்பு அமைப்பு இந்த பாலத்தில் முன்னோடி முயற்சியாக நிறுவப்பட்டுள்ளது. மேலும் இதில் 220 ஆழ்துளைகள் அமைக்கப்பட்டுள்ளதால் மழை நீர் நிலத்திற்குள் சென்றுவிடும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
தமிழகத்தில், மதுரை ஊமச்சிகுளத்தில் இருந்து நத்தம் வரையிலான 7.5 கி.மீ. நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலமே, இதுநாள் வரை தமிழகத்தின் நீளமான பாலமாக இருந்தது. தற்போது, உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரையிலான 10.10 கி.மீ. நீளமுள்ள அவிநாசி சாலை மேம்பாலம் தென்மாநிலங்களின் மிக நீண்ட மேம்பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்த 10 கி.மீ. தூரத்தை கடக்க 45 முதல் 50 நிமிடங்கள் ஆன நிலையில் தற்போது இந்த பாலத்தில் சென்றால் 10 நிமிடங்களில் கடந்து விட முடியும் என்கிறார்கள்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications