சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த மூவ் என்ன? நடிகர் சித்தார்த்துக்கு சென்னை போலீஸ் சம்மன், சாய்னா நேவால் விவகாரத்தில் நடவடிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து ஆபாசக் கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்ததாக வழங்கப்பட்ட நோட்டீஸ் குறித்து நடிகர் சித்தார்த்துக்கு சென்னை காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பெரோஸ்பூர் நகருக்குச் சென்றார் அப்போது விவசாயிகளின் போராட்டத்தால் அவரது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது.

20 நிமிட காத்திருப்புக்குப் பிறகு பிரதமர் மோடி நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார் இதற்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுப்பப்பட்டது.

பெண்ணை அப்படி டார்கெட் பண்ணாதீங்க.. சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி.. சாய்னா பரபர பதில் பெண்ணை அப்படி டார்கெட் பண்ணாதீங்க.. சித்தார்த் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சி.. சாய்னா பரபர பதில்

சாய்னா நேவால் கருத்து

சாய்னா நேவால் கருத்து

இந்த சம்பவம் குறித்து பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த ஒரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது எனவும் பஞ்சாபில் பிரதமர் மோடி மீது நடந்த கோழைத்தனமான தாக்குதலை வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன் என கருத்து தெரிவித்து இருந்தார்.

சிக்கிய சித்தார்த்

சிக்கிய சித்தார்த்

சாய்னாவின் ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவிட்த்த நடிகர் சித்தார்த், சில ஆபாச வார்த்தைகளோடு டிவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்ததாகவும், சித்தார்த்தின் சாய்னா தொடர்பான பதிவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து நடிகர்கள் பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் நடிகர் சித்தார்த்தை வெளுத்து வாங்கி வந்தனர். தனது செயலுக்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்பதாகவும் நீங்கள்தான் உண்மையான சாம்பியன் என்றும் கூறியிருந்தார். இதற்கு சாய்னாவும் பதிலளித்திருந்தார்.

மகளிர் ஆணையம் நோட்டீஸ்

மகளிர் ஆணையம் நோட்டீஸ்

இந்நிலையில் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஆபாச வார்த்தைகளால் விமர்சித்த நடிகர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியிருந்தது. இதேபோல பெண் ஊடகவியலாளர் ஒருவரை விமர்சித்தது குறித்தும் மீண்டும் தமிழக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் குறித்து விசாரணை நடத்த சென்னை காவல் துறைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

சென்னை காவல்துறை சம்மன்

சென்னை காவல்துறை சம்மன்

இதையடுத்து சட்ட நிபுணர்களுடன் சென்னை போலீசார் ஆலோசனை நடத்தினார். சட்ட நிபுணர்களுடனான சென்னை போலீசார் ஆலோசனை நடத்திய நிலையில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு பரப்பும் வகையில் டிவிட்டரில் கருத்து தெரிவித்த வழக்கில் நடிகர் சித்தார்த்துக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர் எனவும், கொரோனா காலம் என்பதால் எந்த முறையில் விசாரணை நடத்தலாம் என ஆலோசனை நடத்திவருவதாக தெரிவித்துள்ளார்.

English summary
Chennai Metropolitan Police Commissioner Shankar Jival has said that actor Siddharth has been summoned by the Chennai Police on a notice issued for posting obscene comments on badminton player Saina Nehwal on Twitter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X